இங்கிலாந்து வீரர் ஹேல்ஸ் உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதில் சந்தேகம்

90
Getty image

இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அலெக்ஸ் ஹேல்ஸ் சொந்த காரணங்களுக்காக கிரிக்கெட்டிலிருந்து சில காலம் ஒதுங்கி இருக்கப் போவதாக திடீரென அறிவித்துள்ளார்.

12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே 30ஆம் திகதி முதல் ஜூலை 14ஆம் திகதி வரை நடைபெறுகிறது. உலகக் கிண்ணத்தில் பங்கேற்கவுள்ள பெரும்பாலான அணிகள் தத்தமது குழாங்களை அறிவித்துவிட்டன.

உலகக் கிண்ணத்திற்கான உத்தேச இங்கிலாந்து குழாம் அறிவிப்பு

இங்கிலாந்து கிரிக்கெட் சபை (ECB) கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்கான, 15 பேர்…

இந்த நிலையில், இம்முறை உலகக் கிண்ணத்தை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்படுகின்ற இங்கிலாந்து அணி, கடந்த ஏப்ரல் 17ஆம் திகதி உலகக் கிண்ணத்தில் விளையாடுகின்ற தமது 15 வீரர்களின் பட்டியலை  அறிவித்திருந்தது. அதில் எதிர்பார்க்கப்படாத ஒருசில வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்த போதிலும், அந்த அணி ஒருபுறத்தில் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்ததுடன், மறுபுறத்தில் நல்ல வரவேற்பையும் பெற்றது.

இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரும், ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான அலெக்ஸ் ஹேல்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இங்கிலாந்தின் உள்ளூர் போட்டித் தொடரான ரோயல் லண்டன் கிண்ண ஒருநாள் தொடரிலிருந்து சொந்த காரணங்களுக்காக விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

அத்துடன், உலகக் கிண்ணத் தொடரில் இருந்து அவர் விலகிக் கொள்வதற்கு தயாராகி வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இங்கிலாந்தின் நொட்டிங்ஹம்ஷையார் அணியில் இந்த வருடம் ஒப்பந்தம் செய்யப்பட்ட அலெக்ஸ் ஹேல்ஸ், கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்மாகிய ரோயல் லண்டன் கிண்ண ஒருநாள் தொடரில் லங்கஷையார் அணியுடன் விளையாட இருந்தார். எனினும், போட்டி ஆரம்பமாவதற்கு முன் திடீரென சொந்த காரணங்களுக்காக அந்த தொடரில் இருந்து விலகுவதாக அந்த அணி நிர்வாகத்துக்கு ஹேல்ஸ் அறிவித்துள்ளார்.

உலகக் கிண்ணத்திற்கான பலமான தென்னாபிரிக்க குழாம்

தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை (CA), கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்கான 15…

இதுதொடர்பில் நொட்டிங்ஹம்ஷையார் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இம்முறை ரோயல் ஒருநாள் தொடரில் இருந்து சொந்த காரணங்களுக்காக விலகிக் கொhள்வதாக அலெக்ஸ் ஹேல்ஸ் எமக்கு அறிவித்துள்ளார். ஆனால், அவர் மீண்டும் எப்போது அணிக்காக விளையாடுவார் என தெரிவிக்கவில்லை

அலெக்ஸ் ஹேல்ஸ் இங்கிலாந்து அணியின் ஒருநாள் தொடரில் கடந்த 4 வருடங்களாக மிக முக்கிய பங்கு வகித்து வருகின்ற வீரராவார். குறிப்பாக அவுஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளுக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டு முக்கியமாக கட்டங்களில் அந்த அணிக்கு வெற்றியையும் பெற்றுக்  கொடுத்துள்ளார்.

கடந்த ஒரு வருடமாக சொந்த விடயங்களுக்காக பல இன்னல்களை சந்தித்து வருகிறார் ஹேல்ஸ். குறிப்பாக, அவரது பெண் தோழி ஹேல்ஸ் தன்னை ஏமாற்றிவிட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். எனவே, அதற்கான விசாரணையும் தற்போது நடைபெற்று வருகின்றது. அதன் பிறகு மன அழுத்தத்தினால் மைதானத்தில் கத்தி கூச்சலிட்ட ஹேல்ஸ்க்கு இங்கிலாந்து கிரிக்கெட் சபை அபராதமும் விதித்தது.

அதுமாத்திரமின்றி, கடந்த செப்டம்பர் மாதம் மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்து சென்று விளையாடியது. அந்த அணியுடனான ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதும் பென் ஸ்டோக்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ் உட்பட சிலர் பிரிஸ்டோலில் உள்ள இரவு விடுதிக்குச் சென்றவேளை, போதையில் அங்கிருந்த ஒரு வாலிபரை பென் ஸ்டோக்ஸ் தாக்கியதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் பென் ஸ்டோக்ஸ் கைது செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார்.

அதேபோல, இந்த சம்பவத்தில் அலெக்ஸ் ஹேல்ஸ்க்கும் தொடர்பு உண்டு எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் விசாரணை முடியும் வரை அலெக்ஸ் ஹேல்ஸ்ஸையும் இங்கிலாந்து அணியில் இருந்து நீக்குவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தது. அதன்பிறகு 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்ட அலெக்ஸ் ஹேல்ஸ், கடந்த வருட இறுதியில் நடைபெற்ற இலங்கை அணியுடனான ஒருநாள் போட்டியில் இடம்பிடித்தார்.

ஸ்மித் தலைவராக பொறுப்பேற்ற முதல் போட்டியில் ராஜஸ்தானுக்கு வெற்றி

ஐ.பி.எல். தொடரில் மும்பை அணிக்கெதிராக நடைபெற்ற 36ஆவது போட்டியில் ராஜஸ்தான்…

இதனிடையே, இங்கிலாந்து உள்ளூர் கவுண்டி அணியான நொட்டிங்ஹம்ஷையார் அணியில் இந்த வருடம் ஒப்பந்தம் செய்யப்பட்டு இதுவரை ஒரு போட்டியில் கூட அவர் விளையாடவில்லை. இதற்காக சரியான காரணங்களையும் அவர் தெரிவிக்கவில்லை.

இருப்பினும், உலகக் கிண்ண அணியில் நன்கு செயல்படுவார் என அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் பட்டியல் வெளியிடப்பட்ட இரண்டு நாட்களில் சொந்த காரணங்களுக்காக சிறிது காலம் கிரிக்கெட்டிலிருந்து ஒதங்கியிருக்க தீர்மானித்துள்ளேன் என தெரிவித்துள்ளார். இது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

எனவே, உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பமாவதற்குள் மீண்டும் அணிக்கு திரும்புவாரா மாட்டாரா என்பது குறித்த தகவலை அலெக்ஸ் ஹேல்ஸ் தெரிவிக்கவில்லை. இதனால், மாற்று வீரரை அறிவிக்கலாமா வேண்டாமா என இங்கிலாந்து கிரிக்கெட் சபை குழப்பத்தில் உள்ளது.

எனினும், இதுதொடர்பில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை எந்தவொரு அறிவிப்பையும் இதுவரை வெளியிடாவிட்டாலும், அடுத்த வாரம் கார்டிப்பில் ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்து அணியின் உலகக் கிண்ண பயிற்சி முகாமில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து கவுண்டி அணியில் விளையாடவுள்ள இந்திய வீரர்கள்

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடருக்கு…

இதேவேளை, உலகக் கிண்ணத்துக்கான இங்கிலாந்து உத்தேச குழாம் அறிவிக்கப்பட்டாலும், அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுடனான ஒருநாள் தொடர் நிறைவடைந்த பிறகு தான் 15 பேர் கொண்ட இறுதிக் குழாத்தை அந்த நாட்டு கிரிக்கெட் சபை அறிவிக்கவுள்ளது.

30 வயதான வலதுகை துடுப்பாட்ட வீரரான அலெக்ஸ் ஹேல்ஸ், இங்கிலாந்து அணிக்காக 11 டெஸ்ட், 70 ஒருநாள் மற்றும் 60 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். .இறுதியாக இவ்வருட முற்பகுதியில் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான ஒருநாள் தொடரிலும் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<