MCCயின் புதிய அரங்கத்தை திறந்துவைத்த குமார் சங்கக்கார

Marylebone Cricket Club

230
lords.org

இங்கிலாந்தில் உள்ள கிரிக்கெட்டின் தயாகம் என வர்ணிக்கப்படும் மெர்லிபோன் கிரிக்கெட் கழக (MCC) மைதானத்தின் புதிய பார்வையாளர் அரங்கினை இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார திறந்துவைத்துள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார, MCCயின் தலைவராக கடமையாற்றி வருகின்றார். இந்தநிலையில், MCCயின் நிறத்திலான கருஞ்சிவப்பு மற்றும் தங்க நிற நாடாவினை வெட்டி, உத்தியோகபூர்வமாக இந்த அரங்கை சங்கக்கார திறந்துவைத்துள்ளார்.

இலங்கை தொடருக்கான தென்னாபிரிக்க குழாம் அறிவிப்பு

புதிதாக திறந்துவைக்கப்பட்டுள்ள இந்த அரங்கிற்கு, கொம்ப்டன் மற்றும் எட்ரிச் அரங்கு என பெயரிடப்பட்டுள்ளது. இந்த அரங்கானது, 53 மில்லியன் பௌண்டுகள் செலவில் அமைக்கப்பட்டுள்ளதுடன், இந்த பணியானது கடந்த 201ஆ9ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தது. கொவிட்-19 தொற்று மற்றும் ஏனைய சவால்களை தாண்டி இந்த அரங்கு 18 மாதங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 

குறித்த அரங்கானது இங்கிலாந்தின் முன்னாள் வீரர்களான டெனிஸ் கொம்ப்டன் மற்றும் பில் எட்ரிச் ஆகியோரை கௌரவப்படுத்தும் முகமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் MCCயின் முக்கிய அதிகாரிகள் மற்றும் டெனிஸ் கொம்ப்டன் மற்றும் பில் எட்ரிச் ஆகியோரின் குடும்பத்தாரும் கலந்துக்கொண்டனர்.

புதிய அரங்கத்தை திறந்துவைத்த பின்னர் கருத்து வெளியிட்ட MCC யின் தலைவர் குமார் சங்கக்கார, 

இந்த அரங்கத்தை திறந்துவைப்பதை பெருமையாக கருதுகிறேன். எனது பதவிக்காலத்தில், MCC மைதானத்தை உலகின் முன்னணி மைதானங்களில் ஒன்றாக அபிவிருத்தி செய்யவேண்டும் என்ற குறிக்கோளை கொண்டுள்ளேன். இந்த புதிய அரங்கில், ரசிகர்கள் எதிர்காலத்தில் கிரிக்கெட்டை பார்வையிடுவார்கள் என்ற குறிக்கோள் நனவாகியமை மகிழ்ச்சியளிக்கிறது.

அத்துடன், இந்த மறக்கமுடியாத நிகழ்வில் டெனிஸ் கொம்ப்டன் மற்றும் பில் எட்ரிச் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்கள் இணைந்தமை மகிழ்ச்சி. குறித்த இருவரும் நட்சத்திர வீரர்கள். அவர்கள் விளையாடுவதை பார்க்க சிறப்பாக இருக்கும். அவர்களின் பிரகாசிப்புகள் எதிர்வரும் காலங்களிலும் மறக்கமுடியாத ஒன்று. அத்துடன், எதிர்வரும் காலங்களிலும் MCC மைதானத்தில் வரலாற்று சிறப்புமிக்க விடயங்கள் நடைபெறும் என்பதில் எந்தவித சந்தேகங்களும் இல்லை என்றார்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…