ரிஷப் பண்ட்டிற்குப் பதிலாக புதுமுக வீரர் பரத்துக்கு அழைப்பு

146
KS Bharat

அவுஸ்திரேலிய அணியுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் பந்து தாக்கியதில் மூளை அதிர்ச்சிக்கு உள்ளாகிய ரிஷப் பண்ட்டிற்குப் பதிலாக இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் ஆந்திராவைச் சேர்ந்த விக்கெட் காப்பாளர் கே.எஸ். பரத் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இந்தியாவுடன் மும்பையில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் பெட் கம்மின்ஸ் வீசிய பவுன்சர் பந்து, துடுப்பாடிக்கொண்டிருந்த இந்திய அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் ரிஷப் பண்ட்டின் தலைக்கவசத்தில் பட்டதால்  அவர் காயமடைந்தார். அதில் ஆட்டமிழந்த அவர், பிறகு மீண்டும் விளையாட வரவில்லை.  

அவுஸ்திரேலியாவுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியிலிருந்து ரிஷப் பண்ட் விலகல்

தலையில் பந்து தாக்கி மூளையில் சிறிய அதிர்ச்சி ஏற்பட்டதன் காரணமாக அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள்

இதனையடுத்து அவுஸ்திரேலிய அணி துடுப்பெடுத்தாடிய போது லோகேஷ் ராகுல் விக்கெட் காப்பாளராகச் செயல்பட்டார். 

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரிஷப் பண்ட்டுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் அவருக்கு விளையாட முடியாத நிலை ஏற்பட்டது

இதனால், இன்று (17) ராஜ்கோட்டில் ஆரம்பமான இரண்டாவது ஒருநாள் போட்டியிலிருந்து ரிஷப் பண்ட் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து ராகுல் இந்திய அணியின் விக்கெட் காப்பாளராகச் செயல்பட்டார்.

இந்த நிலையில் 2ஆவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் மேலதிக விக்கெட் காப்பாளராக ஆந்திராவைச் சேர்ந்த கே.எஸ். பரத் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது

26 வயதான கே.எஸ். பரத், இதுவரை 74 முதல்தரப் போட்டிகளில் 4143 ஓட்டங்களை எடுத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 100க்கும் மேல் துடுப்பாட்ட சராசரியை வைத்துள்ளார்

இந்தியாவுடன் புதிய வீரரை களமிறக்கவுள்ள நியூசிலாந்து அணி

தற்போது அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட

அத்துடன், கடந்த வருடம் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான தொடரில் விளையாடிய பரத், இதுவரை 51 லிஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 சதங்கள் மற்றும் 5 அரைச் சதங்களைக் குவித்துள்ளார்

இந்த நிலையில், 3ஆவது ஒருநாள் போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடுவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் எனவும் பிசிசிஐ அறிவித்துள்ளது

இதுஇவ்வாறிருக்க, இந்திய அணிக்காக அண்மைக்காலமாக பிரகாசித்து வரும் சஞ்சு சம்சன், ஷான் கிஷன் ஆகிய இருவரும் தற்போது நடைபெற்று வருகின்ற நியூஸிலாந்து அணியுடனான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளதால் அவர்களில் ஒருவரை பதில் வீரராக இந்திய தேர்வுக் குழு அறிவிக்கவில்லை.

இதேவேளை, ரிஷப் பண்ட்டுக்குப் பதிலாக விருத்திமான் சஹா அல்லது தினேஷ் கார்த்திக்கை ஒருநாள் அணியில் இணைத்துக் கொண்டிருக்கலாமே என கிரிக்கெட் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க