சிம்பாப்வே தொடரில் கொஹ்லி, தவான், ஷர்மாவிற்கு ஓய்வு

774
Kohli, Rohit and Dhawan

9ஆவது ஐ.பி.எல். போட்டித் தொடர் எதிர்வரும் 29ஆம் திகதியோடு நிறைவுறுகிறது. இந்த தொடர் முடிவடைந்ததும் இந்திய கிரிக்கட் அணி சிம்பாப்வேவிற்கு சுற்றுப்பயணம் செல்கிறது. அங்கு சென்று மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடர் ஜூன் மாதம் 11ஆம் திகதி முதல் தொடங்குகிறது.22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இத்தொடரில் விளையாடும் இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராத் கொஹ்லி, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் ஷீகர் தவான் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் தலைவர் மஹேந்திர சிங் டோனிக்கு ஓய்வு கொடுப்பது குறித்த எந்தத் தகவலும் வெளிவரவில்லை.

விராத் கொஹ்லி கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற தென் ஆபிரிக்காவிற்கு எதிரான தொடரில் இருந்து தொடர்ச்சியாக இந்திய அணியில் விளையாடி வருகிறார். அவர் 17 டெஸ்ட், 10 ஒருநாள் மற்றும் 15 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அத்துடன் தற்போது ஐ.பி.எல். போட்டித் தொடரிலும் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார்.

சிம்பாப்வே தொடரைத் தொடர்ந்து இந்திய அணி ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் மேற்கிந்தியத் தீவுகளிற்கு சுற்றப் பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதனால் மேற்கிந்திய தீவுகள் தொடரில் சுறுசுறுப்பாக விளையாடுவதற்காக சிம்பாப்வே தொடரில் விராத் கொஹ்லிக்கு ஓய்வு கொடுக்க பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது.

இந்திய – சிம்பாப்வே போட்டித் தொடர் காலநேர அட்டவணை

  1. ஆவது ஒருநாள் போட்டி – ஜூன் 11
  2. ஆவது ஒருநாள் போட்டி – ஜூன் 13
  3. ஆவது ஒருநாள் போட்டி – ஜூன் 15
  1. ஆவது டி20 போட்டி – ஜூன் 18
  2. ஆவது டி20 போட்டி – ஜூன் 20
  3. ஆவது டி20 போட்டி – ஜூன் 22

எல்லா போட்டிகளும் ஹராரே விளையாட்டு மைதானத்தில் நடைபெறும்

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்