ஷேர்ன் வோர்னிற்காக அர்ப்பணிக்கப்படும் முதல் டெஸ்ட் போட்டி!

Australia tour of Sri Lanka 2022

118

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டி, மறைந்த அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேர்ன் வோர்னிற்கு அர்ப்பணிக்கப்படும் முகமாக விளையாடப்படவுள்ளது.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 29ம் திகதி முதல் ஜூலை 3ம் திகதிவரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்தநிலையில், குறித்த இந்தப்போட்டியில் பங்கேற்பதற்கு ஷேர்ன் வோர்னின் குடும்பத்தாரை இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சு ஆகியவை இணைந்து அழைத்துள்ளன.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஷேர்ன் வோர்னை பெருமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரானது ஏற்கனவே முரளி-வோர்ன் கிண்ணமாக விளையாடப்பட்டு வருகின்றது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணியானது, 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 T20I போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<