ஐசிசி தரவரிசையில் விராட் கோஹ்லிக்கு முன்னேற்றம்!

ICC Rankings

300

சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நிறைவடைந்த பின்னர், சர்வதேச கிரிக்கெட் வாரியம் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

இலங்கை தொடருக்கு பின்னர் அணிக்கு திரும்பும் ஷனொன் கேப்ரியல்

அதன்படி இலங்கை அணிக்கு எதிரான தொடரில், 2 சதங்கள் அடங்கலாக 283 ஓட்டங்களை குவித்த விராட் கோஹ்லி 2 இடங்கள் முன்னேறி துடுப்பாட்ட வரிசையில் 4வது இடத்தை பிடித்துள்ளார். அதுமாத்திரமின்றி இவர் 750 புள்ளிகளை பெற்றுள்ளதுடன், ரஸ்ஸி வென் டர் டசன் (766) 2வது இடத்தையும், குயிண்டன் டி கொக் (759) மூன்றாவது இடத்தையும் துடுப்பாட்ட வரிசையில் பிடித்துள்ளனர்.

ஒருநாள் துடுப்பாட்ட வரிசையில் பாபர் அஷாம் 887 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தை தக்கவைத்துள்ளதுடன், விராட் கோஹ்லி மீண்டும் முதலிடத்தை நோக்கி நகர்ந்துவருகின்றார்.

விராட் கோஹ்லி மாத்திரமின்றி ஒரு சதம் மற்றும் ஒரு அரைச்சதத்துடன் 206 ஓட்டங்களை பெற்றிருந்த சுப்மான் கில் 10 இடங்கள் முன்னேறி 26வது இடத்தையும், பந்துவீச்சில் அசத்திய மொஹமட் சிராஜ் 15 இடங்கள் முன்னேறி 3வது இடத்தையும், 7 இடங்கள் முன்னேறிய குல்தீப் யாதவ் 21வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தை நியூசிலாந்து அணியின் ட்ரெண்ட் போல்ட் தக்கவைத்துள்ளதுடன், முதல் நிலை சகலதுறை வீரராக சகீப் அல் ஹஸன் இடம்பிடித்துள்ளார். இலங்கை அணியை பொருத்தவரை வனிந்து ஹஸரங்க சகலதுறை வீரர்கள் வரிசையில் எந்த முன்னேற்றங்களும் இன்றி 7வது இடத்தை பிடித்துள்ளதுடன், தனன்ஜய டி சில்வா 11வது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<