இலங்கையின் பதக்க எதிர்பார்ப்பான தர்ஷன, அமாஷா அரையிறுதியில் ஏமாற்றம்

105

இருபது வயதுக்கு உட்பட்ட IAAF உலக சம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கையின் பதக்க எதிர்பார்ப்பான அருண தர்ஷன ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் 5ஆவது இடத்தை பெற்று இறுதிப் போட்டிக்கான தகுதியை இழந்தார்.

அதேபோன்று, கனிஷ்ட குறுந்தூர ஓட்ட வீராங்கனையான அமாஷா டி சில்வாவும் பெண்களுக்கான 100 மீற்றர் அரையிறுதி ஓட்டப் போட்டியில் தோல்வி அடைந்தார்.

உலக கனிஷ்ட மெய்வல்லுனரில் அருண, அமாஷா அரையிறுதிக்கு தகுதி

பின்லாந்தின் தம்பரே நகரில் நடைபெற்றுவரும் 17ஆவது …

பின்லாந்தின் டேம்பியர் நகரில் நடைபெற்றுவரும் இந்த போட்டியில் அருண தர்ஷண வியாழக்கிழமை நடந்த ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டின் 3ஆவது அரையிறுதி பந்தையத்தில் பங்கேற்றார். அவருடன் கரீபியாவின் அடுத்த உசைன் போல்ட் என அழைக்கப்படும் ஜமைக்காவின் இளம் வீரர் ப்ரோகி கிறிஸ்டோபரும் இருந்தார்.

போட்டியின் முதல் 300 மீற்றரில் நல்ல வேகத்தை பெற்ற அருண கடைசியில் தனது வழக்கமான ஓட்டத்தை வெளிக்காட்ட தவறினார். இதனால் அந்த பந்தயத்தில் தகுதிக்கான வேகத்தை காட்டவும் தவறினார். அரையிறுதியின் மூன்றாவது பந்தயத்தில் முதல் இரண்டு இடங்களை பிடித்த வீரர்களுடன் வேகமான காலத்தை வெளிப்படுத்திய இரண்டு வீரர்களே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

ஐந்து நாட்கள் கொண்ட 20 வயதுக்கு உட்பட்ட IAAF உலக சம்பியன்ஷிப் போட்டியின் முதல் இரண்டு நாட்களும் வெய்யிலுடன் கூடிய காலநிலை நிலவியபோதும் மூன்றாவது நாளில் மழையுடன் வெப்பநிலை 22 செல்சியஸாக குறைந்திருந்தது இலங்கையர்களுக்கு கடினமாக அமைந்தது.

இதனால் ஆண்களுக்கான 400 மீற்றர் போட்டியின் இரண்டாவது அரையிறுதி பந்தயம் தாமதமானது. இதனைத் தொடர்ந்து தர்ஷன பங்கேற்கவிருந்த 3ஆவது அரையிறுதிப் பந்தயம் ஆரம்பிப்பதற்கு 20 நிமிடங்கள் மேலதிகமாக காத்திருக்க வேண்டி ஏற்பட்டது.  

போட்டியின்போது தர்ஷன ஓட்டப்பந்தய ஆடைக்கு மேலால் ஜக்கட் அணிந்திருந்தார். புதன்கிழமை நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் அவர் இவ்வாறு அணிந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் தங்கப்பதக்கம் வெல்லும் வாய்ப்புக் கொண்ட ஜமைக்காவின் டெய்லர் 46.18 வினாடிகளில் போட்டியை முடித்து முதலிடத்தை பெற்றார். அவரது காலம் மூன்று அரையிறுதிகளிலும் முதலிடத்தை பெற்றவர்களில் குறைந்த வேகம் என்றபோதும் டெய்லரின் சிறந்த காலம் 44.88 வினாடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவின் கெமல் ஸ்டுவர்ட்பயின்ஸ் இரண்டாவது இடத்தை பெற்று இரண்டாவது வீரராக இறுதிப் போட்டிக்கு நேரடி தகுதி பெற்றார். அமெரிக்காவின் ஹவார்ட் பீல்ட்ஸ் மூன்றாவது இடத்தை பிடித்து சிறந்த காலத்தை பதிவு செய்ததன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

முன்னதாக நடந்த முதல் அரையிறுதிப் பந்தயத்தில் பெல்ஜியத்தின் ஜெனதன் ஸ்கூர் புதிய கனிஷ்ட தேசிய சாதனை ஒன்றுடன் 45.77 வினாடிகளில் போட்டியை முடித்து ஜமைக்காவின் சான்ட்ஸ் சோயர்ஸை இரண்டாவதாக்கினார். இதன்மூலம் அவர் அரையிறுதியில் வேகமான காலத்தையும் பதிவு செய்தார்.  

ஆசிய இளையோர் கரப்பந்தாட்ட தொடரில் இலங்கைக்கு ஒன்பதாம் இடம்

ஈரானின் தெப்ரிஸ் நகரில் நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட ..

இத்தாலியின் எடோர்டோ ஸ்கொட்டி இரண்டாவது அரையிறுதி பந்தயத்தில் கடைசி நேரத்தில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஜொனதன் ஜோன்ஸ் மற்றும் மைலஸ் மிஸ்னர் டாலியை முந்தி முதலிடத்தை பிடித்தார்.

இந்த ஆண்டில் உலக கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் இலங்கைக்கு முதல் பதக்கம் வென்று தந்த அருண தர்ஷன 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் நம்பிக்கை தரும் வீரராக உள்ளார். அவர் கடந்த மாதம் நடந்த ஆசிய கனிஷ்ட சம்பியன்ஷிப் போட்டியில் தனது சிறந்த காலத்தை (45.79 வினாடி) பதிவு செய்ததோடு ஆசிய சம்பியனாகவும் சாதனை படைத்தார்.

இதேவேளை, உலக சம்பியன்ஷிப் போட்டியில் அமாஷா டி சில்வாவும் ஏமாற்றம் தந்தார். வியாழக்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 100 மீற்றர் அரையிறுதியில் முதல் அரையிறுதிப் பந்தயத்தில் ஓடிய அவர் 11.86 வினாடிகளில் போட்டியை முடித்து 8ஆவது இடத்தையே பெற்றார். அபார வேகத்தை வெளிப்படுத்தி 11.03 வினாடிகளில் போட்டியை முடித்த அமெரிக்காவின் ட்வானிஷா டெர்ரி முதலிடத்தை பிடித்ததோடு அது உலக சம்பியன்ஷிப் போட்டிகளில் புதிய சாதனையாகவும் இருந்தது.  

பின்லாந்து டேம்பியரில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் ஈரலிப்பு கொண்ட ஓடு தளத்தில் அமாஷா தனது சிறந்த ஓட்டக் காலத்தை நெருங்கியது நல்ல முன்னேற்றமாகும். ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அவரது சிறந்த ஓட்ட வேகம் 11.71 வினாடிகளாகும்.   

 மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க…