ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய குழாத்தில் கே.எல். ராஹுல்

India tour of Zimbabwe 2022

123

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய குழாத்தில் கே.எல். ராஹுல் இணைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த குழாத்தில் சிக்கர் தவான் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த போதும், தற்போது அணியின் தலைவராக கே.எல்.ராஹுல் பெயரிடப்பட்டுள்ளதுடன், உப தலைவராக சிக்கர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய அவுஸ்திரேலிய வீரர்கள்!

கே.எல்.ராஹுல் IPL தொடர் நிறைவடைந்த பின்னர், தென்னாபிரிக்க அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற T20I தொடரில் விளையாடியிருந்தார். அதனைத்தொடர்ந்து உபாதைக்கு முகங்கொடுத்திருந்த இவர், பெப்ரவரி மாதத்திற்கு பின்னர் போட்டிகளில் விளையாடவில்லை.

தொடர்ந்து மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இவர் விளையாடுவதற்கான வாய்ப்புகள் இருந்த போதும், கொவிட்-19 தொற்று காரணமாக வாய்ப்பை இழந்திருந்தார். எனினும், தற்போது அணித்லைவராக மீண்டும் உள்வாங்கப்பட்டுள்ளார்.

அணியின் தலைவர் ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளதுடன், ஜஸ்ப்ரிட் பும்ரா உபாதைக்கு முகங்கொடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜஸ்ப்ரிட் பும்ரா ஜிம்பாப்வே தொடரில் மாத்திரமின்றி, ஆசியக்கிண்ணத் தொடரிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரை பொருத்தவரை சகலதுறை வீரர் வொசிங்டன் சுந்தர், ருதுராஜ் கைக்வாட், ராஹுல் திருப்பாதி ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளதுடன், உபாதைக்கு முகங்கொடுத்திருந்த வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹார் மீண்டும் அணிக்குள் வரவழைக்கப்பட்டுள்ளார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளும் ஹராரே மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், இந்த தொடர் எதிர்வரும் 18ம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய குழாம்

கே.எல்.ராஹுல் (தலைவர்), சிக்கர் தவான் (உப தலைவர்), ருதுராஜ் கைக்வாட் சுப்மான் கில், தீபக் ஹூடா, ராஹுல் திருப்பாதி, இசான் கிஷன், சஞ்சு சம்சன், வொசிங்டன் சுந்தர், சர்துல் தாகூர், குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, மொஹமட் சிராஜ், தீபக் சஹார்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<