மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணையும் சூர்யகுமார் யாதவ்!

Indian Premier League 2024

79

மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் சூர்யகுமார் யாதவ் நாளை வெள்ளிக்கிழமை (05) அணியுடன் இணைந்துக்கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூர்யகுமார் யாதவ் இறுதியாக கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான T20I போட்டியில் விளையாடியிருந்தார். குறித்த போட்டியில் சதம் ஒன்றையும் அடித்தாடியிருந்தார்.

தென்னாபிரிக்கா மகளிர் அணியை வீழ்த்தி இலங்கை வரலாற்று வெற்றி

எனினும் குறித்த போட்டியின் போது சூர்யகுமார் யாதவின் கணுக்காலில் உபாதை ஏற்பட்டு அதற்கான சத்திரசிகிச்சையை செய்ய வேண்டியிருந்தது. எனினும் அதன் பின்னர் மற்றுமொரு சத்திரசிகிச்சையை மேற்கொண்டதால், அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தார்.

தொடர்ந்து தேசிய கிரிக்கெட் அக்கடமியில் பயிற்சிகளை இவர் மேற்கொண்டு வந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைவதற்கான அனுமதியை தேசிய கிரிக்கெட் அக்கடமி வழங்கியுள்ளது.

எனவே இவர் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்துக்கொண்டு பயிற்சிகளை ஆரம்பிப்பார் எனவும், அவருடைய பயிற்சி பெறும் உடற்தகுதியை வைத்து அடுத்தப் போட்டியில் அவரை விளையாட வைக்க முடியுமா? என்பதை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அவதானிக்கவுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள நிலையில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07) டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<