ஐ.சி.சி. இன் வாழ்நாள் சாதனையாளர்கள் பட்டியலில் கல்லிஸ்

467

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) தமது வாழ்நாள் சாதனையாளர்கள் பட்டியலில் (Hall of Fame) ஜெக் கல்லிஸ், லிஸா ஸ்டால்கர் மற்றும் ஸஹீர் அப்பாஸ் ஆகிய மூவரினையும் புதிதாக இணைத்துள்ளது. 

பாபர் அஸாம் தலைமையிலான பாகிஸ்தான் டி20 குழாம் வெளியானது

ஐ.சி.சி. ஒன்லைன் (Online) மூலமாக நாடத்திய நிகழ்வு ஒன்றின் போதே இந்த மூன்று பேரும் ஐ.சி.சி. இன் வாழ்நாள் சாதனையாளர்கள் பட்டியலில் இணைக்கப்பட்ட விடயத்தினை அறிவித்திருக்கின்றது.

இந்த மூன்று பேரில் கிரிக்கெட் விளையாட்டு இனம்கண்ட மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக இருக்கும் தென்னாபிரிக்க அணியின் ஜெக் கல்லிஸ் ஒருநாள், டெஸ்ட் என இருவகை போட்டிகளிலும் 10,000 ஓட்டங்கள் குவித்து, 200 விக்கெட்டுக்களுக்கு மேல் கைப்பற்றிய ஒரேயொரு வீரராக உள்ளார். எனவே, இந்த தனித்துவ சாதனைக்கு சொந்தக்காரராக இருக்கும் கல்லிஸை கௌரவிக்கும்  நோக்கிலேயே அவரை ஐ.சி.சி. தமது வாழ்நாள் சாதனையாளர்கள் பட்டியலில் இணைத்திருக்கின்றது. 

இன்னும் கல்லிஸ், டெஸ்ட் போட்டிகளில் 200 பிடியெடுப்புக்களுக்கு மேல் எடுத்த விக்கெட்காப்பாளர் அல்லாத களத்தடுப்பாளராகவும் சாதனை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கடந்த 2014ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்த கல்லிஸ் தான் வாழ்நாள் சாதனையாளர்கள் பட்டியலில் இணைக்கப்பட்ட விடயம் தொடர்பில் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.

“இது (இந்த கெளரவம்) நான் விளையாடும் காலப்பகுதியில் நினைத்தும் கூட பார்க்க முடியாத ஒன்று. உண்மையில் நான் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது விருதுகளையோ அல்லது கெளரவத்தினையோ எதிர்பார்த்து அல்ல. எனது எதிர்பார்ப்பு நான் விளையாடும் தரப்பிற்கு வெற்றியைப் பெற்றுக் கொடுப்பதாகவே இருந்தது.”

“ஆனால், (கிரிக்கெட்) விளையாட்டில் சாதித்த ஒருவருக்கு கெளரவம் கிடைப்பது சிறந்த விடயம். அதேநேரம், விளையாட்டில் சாதித்தமைக்காக மக்களால் கெளரவிக்கப்படுவதும் சிறந்த விடயம். அந்தவகையில், நான் பெருமை கொள்கின்றேன்.” 

இதேநேரம், மகளிர் ஒருநாள் போட்டிகளில் 1000 ஓட்டங்கள், 100 விக்கெட்டுக்கள் என்கிற மைல்கல்லை முதலில் அடைந்த பெண் வீராங்கனையாக சாதனை படைத்தமைக்காகவே அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனையான லிஸா ஸ்டால்கர், வாழ்நாள் சாதனையாளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றார்.

Video – எனது சேவை கிரிக்கெட்டுக்காக மட்டுமல்ல..! – Mahela Jayawardena

இதேநேரம், லிஸா ஸ்டால்கர் 50 ஓவர்கள் கொண்ட மகளிர் உலகக் கிண்ணம், T20 உலகக் கிண்ணம் என்பவற்றினை வென்ற அவுஸ்திரேலிய அணியிலும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

அதேநேரம், “ஆசியாவின் பிரட்மன்” என அழைக்கப்படும் பாகிஸ்தானின் முன்னாள் துடுப்பாட்ட நட்சத்திரமான ஸஹீர் அப்பாஸ் 1970களில் தான் வைத்த சிறந்த டெஸ்ட் பதிவுகளுக்காகவும், முதல்தரக் கிரிக்கெட் போட்டிகளில் தனது மலைக்க வைக்கும் சாதனைகளுக்காகவுமே ஐ.சி.சி. இன் வாழ்நாள் சாதனையாளர்களில் ஒருவராக மாறியிருக்கின்றார்.

ஸஹீர் அப்பாஸ் டெஸ்ட் போட்டிகளில் 45 என்கிற துடுப்பாட்ட சராசரியுடன் 5,062 ஓட்டங்கள் பெற்றிருப்பதோடு, முதல்தரக் கிரிக்கெட் போட்டிகளில் மொத்தமாக 108 சதங்களுடன் 34,843 ஓட்டங்களை குவித்திருக்கின்றார். இதேநேரம், முதல்தரக் கிரிக்கெட் போட்டிகளில் ஸஹீர் அப்பாஸின் துடுப்பாட்ட சராசரி 51 ஆக காணப்படுகின்றது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க