அவுஸ்திரேலிய – தென்னாபிரிக்க அணிகள் இடையிலான ஒருநாள் தொடரில் இருந்து தென்னாபிரிக்க அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ககிஸோ றபாடா வெளியேறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>ஆசியக் கிண்ண பாகிஸ்தான் குழாத்தில் பாபர், ரிஸ்வான் நீக்கம்<<
அவுஸ்திரேலிய சென்றிருக்கும் தென்னாபிரிக்க அணி அங்கே T20 தொடரினை அடுத்து, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகின்றது.
இந்த ஒருநாள் தொடர் இன்று (19) ஆரம்பமாகிய நிலையிலையே ககிஸோ றபாடா ஒருநாள் தொடரில் இருந்து வெளியாகிய செய்தி வெளியாகியிருக்கின்றது.
றபாடாவிற்கு அவரது வலது காலில் ஏற்பட்ட வீக்க நிலைமையே அவர் தென்னாபிரிக்க தொடரில் இருந்து வெளியேறியமைக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அதேநேரம் உபாதைக்குள்ளான றபாடாவிற்கு தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் மருத்துவ குழாம் சிகிச்சைகளை வழங்கி அவர் தொடர்பில் அவதானித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<