“2021ம் ஆண்டு வரை தலைவராக நீடிப்பார் டிம் பெய்ன்” – லாங்கர்

76
Justin Langer

அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் தலைவராக செயற்பட்டு வரும் டிம் பெய்ன், 2021ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிவரை தலைவராக செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ஜஸ்டின் லாங்கர், டிம் பெய்னின் தலைமைத்துவம் தொடர்பில் குறிப்பிடுகையில், இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்கள், விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான அலெக்ஸ் கெரி டெஸ்ட் குழாத்துக்குள் வரவழைக்கப்பட வேண்டும் என கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். அத்துடன், எதிர்வரும் மார்ச் மாதத்துடன் ஸ்டீவ் ஸ்மித்தின் தலைவருக்கான தடை நீங்கவுள்ளதுடன், தற்போதைய தலைவர் டிம் பெய்ன் மீதான அவதானம் எழுந்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டின் சாதனைகளும், சம்பவங்களும் – 2019 மீள் பார்வை

சர்வதேச கிரிக்கெட்டில் இந்த ஆண்டு பல சுவாரஷ்யமான..

கேப் டவுன் டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பில் ஒருவருட தடைக்கு முகங்கொடுத்த ஸ்மித், இரண்டு வருடம் தலைவர் பதவியில் செயற்படுவதற்கான தடைக்கும் முகங்கொடுத்திருந்தார். இந்த தடையின் பின்னர், ஸ்மித் தலைவராக செயற்பட வாய்ப்புள்ளது என்ற தகவல்கள் வெளியாகியிருந்தன.

எவ்வாறாயினும், அவுஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ஜஸ்டின் லாங்கர், அணியின் சிறந்த வீரர் டிம் பெய்ன் என தெரிவித்துள்ளதுடன், அவுஸ்திரேலிய அணியின் தலைமை பொறுப்புக்கு சரியான தெரிவு பெய்ன் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.

புதிய சுழல் பந்துவீச்சாளரை அணியில் இணைக்கும் அவுஸ்திரேலியா

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான..

“பெய்ன் தலைமைத்துவத்தில் என்ன தவறு இருக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. கடைசி போட்டியில் அவருக்கு ஆட்டநாயகன் விருது பெறுவதற்கும் வாய்ப்பிருந்தது. 7 ஆட்டமிழப்புகளை அவர் மேற்கொண்டிருந்ததுடன், 70 ஓட்டங்களையும் பெற்றிருந்தார். அதேநேரம், அவர் ஓட்டங்களை குவித்த விதம், அணியை வழிநடத்தும் விதம், விக்கெட் காப்பு மற்றும் வீரர்களிடம் இணைந்து செயற்படும் விதம் என்பன மிகச்சிறப்பானதாக உள்ளது. அவருடம் இணைந்து செயற்படுவது எனக்கு பிடித்திருக்கிறது”

அதுமாத்திரமின்றி கடைசியாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அவரது பிரகாசிப்பு மற்றும் ஆஷஷ் தொடரின் போது அவரது தலைமைத்துவம் என்பன அவர் தொடர்ந்தும் தலைவராக செயற்படுவதற்கான நம்பிக்கையை அளித்துள்ளது. எனவே, டெஸ்ட் சம்பியன்ஷிப் நிறைவு வரை அவர் தலைவராக செயற்படுவதற்கான வாய்ப்புள்ளது” என்றார்.

அவுஸ்திரேலிய அணி தற்போது நியூசிலாந்து  அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருவதுடன், தொடரில் ஒரு போட்டி எஞ்சியிருக்க, ஆஸி. அணி 2-0 என தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<