தொலைத்த உலகக் கிண்ணப் பதக்கத்தை கண்டெடுத்த ஆர்ச்சர்

53
Jofra Archer
 

நீங்கள் தொலைத்த பொருள் ஒன்று, நீங்கள் கடைசியாக தேடிய இடத்திலேயே இருக்கும் என சொல்லப்படுவதுண்டு. இதற்கு அமைவாக, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளரான ஜொப்ரா ஆர்ச்சரும் தான் தொலைத்த பொருள் ஒன்றினை கண்டெடுத்திருக்கின்றார்.  

Catch me if you can: முத்தையா முரளிதரன்

கிரிகெட்டின் உயரிய அங்கீகாரமான ஐசிசி Hall of Fame இனுள் உள்வாங்கப்பட்ட முதல்..

இங்கிலாந்து கிரிக்கெட் அணி 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ணத்தின் வெற்றியாளர்களாக மாறியது. இந்த வெற்றியின் போது இங்கிலாந்தின் உலகக் கிண்ணக் குழாத்தில் இருந்த வீரர்கள் அனைவரும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

இங்கிலாந்தின் உலகக் கிண்ணக் குழாத்தில் இருந்த ஜொப்ரா ஆர்ச்சருக்கும் உலகக் கிண்ணப் பதக்கம் கிடைத்தது. ஆனால் ஜொப்ரா ஆர்ச்சர் தனது உலகக் கிண்ணப் பதக்கம் தான் வீடு மாறும் சந்தர்ப்பத்தில் தொலைந்துவிட்டதாக கடந்த வாரம் தெரிவித்திருந்தார். 

ஜொப்ரா ஆர்ச்சர் உலகக் கிண்ணப் பதக்கத்தினை தொலைத்தது, அவருக்கும் அவரது இரசிகர்களுக்கும் மிகப் பெரும் கவலையாக மாறியது. இந்நிலையில் ஆர்ச்சர் தான் தொலைத்த பதக்கத்தினை கண்டெடுத்துவிட்டதாக குறித்த பதக்கத்தின் புகைப்படத்தோடு ஒரு பதிவினை தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டிருக்கின்றார். 

ஆர்ச்சர் அவரது வீட்டில் உள்ள விருந்தினர் படுக்கையறையினை சோதனையிட்ட போதே, உலகக் கிண்ண வெற்றிப் பதக்கம் கிடைத்திருக்கின்றது. இதை ஆர்ச்சரே உறுதி செய்திருக்கின்றார்.

”(நான்) எழுமாறாக விருந்தினர் படுக்கையறையினையை சோதனையிட்ட பொழுதே பதக்கம் கிடைத்தது.” 

பதக்கம் தற்போது கிடைத்திருக்கும் நிலையில், மீண்டும் கிடைத்த குறித்த பதக்கம் மூலம் ஆர்ச்சர் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக அறியக் கிடைக்கின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<