இங்கிலாந்து டெஸ்ட் குழாமிலிருந்து வெளியேறும் ஜேம்ஸ் அண்டர்சன்

70

நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது விலா எலும்பு உபாதைக்குள்ளான இங்கிலாந்தின் அனுபவ வேகப் பந்துவீச்சாளரான ஜேம்ஸ் அண்டர்சன் குறித்த தொடருக்கான எஞ்சியுள்ள இரு போட்டிகளுக்குமான இங்கிலாந்து குழாமிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

போட்டிக்கு போட்டி தரவரிசையில் முன்னேறிவரும் மார்னஸ் லபுஷேன்

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவதும் ………….

இருதரப்பு கிரிக்கெட் தொடருக்காக தென்னாபிரிக்க மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 4 போட்டிகள், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் ஆகிய இரு தொடர்களில் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியுடன் மோதவுள்ளது

சுற்றுப்பயணத்தின் முதல் தொடரான டெஸ்ட் தொடர் தற்சயம் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணி 107 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற நிலையில், தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை (03) ஆரம்பமாகி, நேற்று முன்தினம் (07) நிறைவுக்கு வந்தது.

இறுதி நாள், இறுதி நேரம் வரை விறுவிறுப்பாக சென்ற குறித்த போட்டியின் இறுதியில் இங்கிலாந்து அணி 189 ஓட்டங்களினால் த்ரில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளரான ஜேம்ஸ் அண்டர்சன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியதுடன், இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

கேப்டவுண், நியூலண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற குறித்த டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் ஆட்டத்தின்  போது பந்துவீசிய ஜேம்ஸ் அண்டர்சனுக்கு விலா எலும்பு பகுதியில் வலி ஏற்பட்டதை அவர் உணர்ந்தார். அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 18 ஓவர்கள் மாத்திரம் வீசிய நிலையில் பந்துவீசுவதை இடைநிறுத்திக்கொண்டார்

இதனை தொடர்ந்து நேற்று (08) மேற்கொள்ளப்பட்ட எம்.ஆர். ஸ்கேன் பரிசோதனையின் பின்னர் ஜேம்ஸ் அண்டர்சன் உபாதைக்குள்ளாகியுள்ளமை தெரியவந்தது. குறித்த பரிசோதனை முடிவுகளின் பின்னர் ஜேம்ஸ் அண்டர்சனுக்கு ஓய்வு தேவை என தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து எஞ்சியுள்ள போட்டிகளுக்கான குழாமிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், எதிர்வரும் சில தினங்களில் ஜேம்ஸ் அண்டர்சன் தாயகம் (இங்கிலாந்து) நோக்கி பயணமாகவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுடனான 3ஆவது டி20யிலிருந்து இசுரு உதான விலகல்

இந்தியாவுக்கு எதிராக நாளை (10) நடைபெறவுள்ள ……….

இதற்கு முன்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் அவுஸ்திரேலிய அணியுடன் நடைபெற்ற ஆஷஷ் கிண்ண தொடரின் போது ஜேம்ஸ் அண்டர்சன் உபாதைக்குள்ளாகி அதிலிருந்து நான்கு மாதங்களுக்கு பின்னர் மீண்டும் டெஸ்ட் போட்டிகளுக்கு திரும்பிய நிலையில் தற்போது மீண்டும் உபாதைக்குள்ளாகியுள்ளார்.

வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சனின் உபாதை காரணமாக ஜொப்ரா ஆர்ச்சர் அல்லது மார்க் வூட்டிற்கு அடுத்து நடைபெறவுள்ள போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கவுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை (16) பேர்த் எலிசபெத்தில் நடைபெறவுள்ளது