Home Tamil ஸ்டெய்னின் வருகையுடன் ஸ்டாலியன்ஸை வீழ்த்திய கண்டி டஸ்கர்ஸ்

ஸ்டெய்னின் வருகையுடன் ஸ்டாலியன்ஸை வீழ்த்திய கண்டி டஸ்கர்ஸ்

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

127
Capture Courtesy - SLC

லங்கா ப்ரீமியர் லீக்கில் (LPL) இன்று (09) நடைபெற்ற முதல் போட்டியில், ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியை எதிர்கொண்ட கண்டி டஸ்கர்ஸ் அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்து, 150 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கண்டி டஸ்கர்ஸ் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

Read : PSL ஐ விட LPL பௌண்டரி எல்லை பெரியது – சொஹைப் மலிக்

போட்டியில் களமிறங்கிய ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி அவர்களுடைய கடைசிப்போட்டியிலிருந்து எவ்விதமான மாற்றங்களையும் மேற்கொண்டிருக்காத நிலையில், கண்டி டஸ்கர்ஸ் அணியில் இரண்டு மாற்றங்கள் மேற்கொண்டிருந்தன.

குறிப்பாக, அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த தென்னாபிரிக்க வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் கண்டி டஸ்கர்ஸ் அணிக்காக முதல் போட்டியில் விளையாடியதுடன், சீகுகே பிரசன்ன மீண்டும் அணியில் இடம்பிடித்திருந்தார்.

ஜப்னா ஸ்டாலியன்ஸ் – அவிஷ்க பெர்னாண்டோ, மினோத் பானுக, ஜொன்சன் சார்ல்ஸ், சொஹைப் மலிக், திசர பெரேரா (தலைவர்), வனிந்து ஹசரங்க, சரித் அசலங்க, உஸ்மான் ஷின்வாரி, டுவானே ஒலிவியர், விஜயகாந்த் வியாஸ்காந்த், சுரங்க லக்மால்

கண்டி டஸ்கர்ஸ் – குசல் பெரேரா (தலைவர்), குசல் மெண்டிஸ், அசேல குணரத்ன, டில்ருவான் பெரேரா, ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ், சீகுகே பிரசன்ன, ப்ரெண்டன் டெய்லர், இர்பான் பதான், நுவான் பிரதீப், விஷ்வ பெர்னாண்டோ, டேல் ஸ்டெய்ன்

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி, கடந்த போட்டிகளை விட, இந்தப் போட்டியில் ஓட்டங்களை பெற தடுமாறியது. ஆனாலும், சொஹைப் மலிக் தன்னுடைய அனுபவத்தின் ஊடாக பொறுப்பாக ஆடி அரைச்சதம் கடக்க, ஸ்டாலியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 150 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி சார்பாக சொஹைப் மலிக் அதிகபட்சமாக 44 பந்துகளில் 59 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, மினோத் பானுக 21 ஓட்டங்களையும், சரித் அசலங்க 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில், நுவான் பிரதீப் 3 விக்கெட்டுகளையும், டேல் ஸ்டெய்ன், அசேல குணரத்ன மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கண்டி டஸ்கர்ஸ் அணி,  அசேல குணரத்ன, குசல் பெரேரா மற்றும் இர்பான் பதான் ஆகியோரின் ஓட்ட பங்களிப்புடன் 19.1 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

கண்டி டஸ்கர்ஸ் அணி சார்பாக அசேல குணரத்ன அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், அணித்தலைவர் குசல் பெரேரா 42 ஓட்டங்களையும், இர்பான் பதான் ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், சுரங்க லக்மால் மற்றும் டுவானே ஒலிவியர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இன்றைய போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் கண்டி டஸ்கர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் 4வது இடத்தை பிடித்துள்ளது. அதுமாத்திரமின்றி அரையிறுதிக்கான போட்டியையும், கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியுடன் தக்கவைத்துக்கொண்டது.

போட்டியின் சுருக்கம் 

Result


Kandy Falcons
151/4 (19.1)

Jaffna Kings
150/10 (20)

Batsmen R B 4s 6s SR
Avishka Fernando c Kusal Janith b Dale Steyn 0 2 0 0 0.00
Johnson Charles c Dale Steyn b Nuwan Pradeep 17 13 4 0 130.77
Charith Asalanka lbw b Vishwa Fernando 18 10 1 2 180.00
Shoaib Malik c Rahmanullah Gurbaz b Nuwan Pradeep 59 44 5 1 134.09
Minod Bhanuka c Kusal Mendis b Asela Gunarathne 21 22 1 0 95.45
Thisara Perera c Dilruwan Perera b Asela Gunarathne 1 2 0 0 50.00
Wanindu Hasaranga c Kusal Janith b Dale Steyn 2 3 0 0 66.67
Suranga Lakmal run out () 5 3 1 0 166.67
Usman Shinwari c Nuwan Pradeep b Vishwa Fernando 11 10 2 0 110.00
Vijayakanth Viyaskanth b Nuwan Pradeep 8 7 1 0 114.29
Duanne Olivier not out 4 4 0 0 100.00


Extras 4 (b 0 , lb 1 , nb 0, w 3, pen 0)
Total 150/10 (20 Overs, RR: 7.5)
Bowling O M R W Econ
Dale Steyn 4 0 33 2 8.25
Vishwa Fernando 4 0 29 2 7.25
Nuwan Pradeep 4 0 36 3 9.00
Asela Gunarathne 4 0 21 2 5.25
Dilruwan Perera 3 0 21 0 7.00
Seekkuge Prasanna 1 0 9 0 9.00


Batsmen R B 4s 6s SR
Rahmanullah Gurbaz c Shoaib Malik b Suranga Lakmal 8 8 2 0 100.00
Kusal Janith c Johnson Charles b Wanindu Hasaranga 42 36 4 0 116.67
Kusal Mendis c Wanindu Hasaranga b Duanne Olivier 2 8 0 0 25.00
Brendon Taylor st Johnson Charles b Wanindu Hasaranga 11 7 1 1 157.14
Asela Gunarathne not out 52 37 5 1 140.54
Irfan Pathan not out 25 19 4 0 131.58


Extras 11 (b 0 , lb 3 , nb 0, w 8, pen 0)
Total 151/4 (19.1 Overs, RR: 7.88)
Did not bat Dilruwan Perera, Seekkuge Prasanna, Vishwa Fernando, Nuwan Pradeep, Dale Steyn,

Bowling O M R W Econ
Usman Shinwari 4 0 35 0 8.75
Suranga Lakmal 2 0 18 1 9.00
Duanne Olivier 3.1 0 24 1 7.74
Wanindu Hasaranga 4 0 23 2 5.75
Thisara Perera 3 0 20 0 6.67
Vijayakanth Viyaskanth 2 0 18 0 9.00
Shoaib Malik 1 0 10 0 10.00



  மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க