அறிமுக வருடத்திலேயே அபாரம் காண்பிக்கும் புனித பத்திரிசியார் வீரர்கள்

838

இலங்கை கால்பந்தில் அதிக ரசிகர்களையும், அது போன்றே மிகப் பெரிய அளவிலான கால்பந்து பிரியர்களையும் கொண்ட பிரதேசமாக உள்ள யாழ்ப்பாணம், தற்பொழுது தேசிய மட்டத்தில் பிரகாசிக்கும் பல கால்பந்து வீரர்களை தன்னிடம் இருந்து தேசத்திற்கு வெளிப்படுத்தி வருகின்றது.

அந்த வகையில், நீண்ட கால கால்பந்து வரலாற்றைக் கொண்ட யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியும் தேசிய மட்டத்தில் தமது நாமத்தை வெளிப்படுத்தும் ஒரு கல்லூரியாக மாற்றம் பெற்று வருகின்றது. தன்னகத்தே கொண்டுள்ள திறமை வாய்ந்த கால்பந்து வீரர்களின் வெற்றிகள் மற்றும் சாதனைகள் மூலமே இன்று இக்கல்லூரி இந்த அளவு பிரபலம் கண்டுள்ளது.

புனித பேதுரு கல்லூரியிடம் வீழ்ந்து முதல் தோல்வியை சந்தித்த புனித பத்திரிசியார்

இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்படும் பிரிவு…

யாழ்ப்பாணத்தில் உள்ள நவாந்துறை சென் மேரிஸ், நாவாந்துறை சென் நீக்கிலஸ், குருநகர் பாடும்மீன் மற்றும் பாசையூர் சென் அன்ரனிஸ் விளையாட்டுக் கழகங்கள் உட்பட பல கழக அணிகளில் உள்ள திறமை வாய்ந்த நட்சத்திர வீரர்களை உருவாக்கிய பெருமை புனித பத்திரிசியார் கல்லூரிக்கு உண்டு.

கல்லூரி கால்பந்தின் கடந்த காலம்

யாழ்ப்பாணத்தில் அதிகம் நேசிக்கப்படும் இந்த விளையாட்டை அவர்கள் தமது பகுதிகளுக்குள் மாத்திரம் விளையாடி வரவில்லை. தமது பகுதியில் செலுத்தும் ஆதிக்கத்தைப் போன்றே தேசிய அளவிலும் வெற்றிகளைப் படைத்த புனித பத்திரிசியார் கல்லூரியின் கால்பந்து அணி கடந்த 2008ஆம் ஆண்டும் பிரிவு இரண்டில் வெற்றி பெற்று பிரிவு ஒன்றுக்கு தரமுயர்த்தப்பட்டது. எனினும் அன்றைய நாட்களில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக போக்குவரத்தை மேற்கொள்ள முடியாமல் இருந்தமையினால் அவர்கள் பிரிவு ஒன்றில் விளையாடுவதற்கு கொழும்புக்கு பயணிக்கவில்லை. இதன் காரணமாக அவர்கள் மீண்டும் தரமிறக்கப்பட்டனர்.

எனினும், இக்கல்லூரி முன்பை விட அண்மைக் காலமாக பல சிறந்த வீரர்களை உருவாக்கியுள்ளதுடன் முக்கிய வெற்றிகளையும் பெற்றுள்ளது. அதன் பயனாக தேசிய மட்டத்தில் பல அடைவுகளையும் அவர்கள் சந்தித்துள்ளனர்.

முதல்முறை இலங்கை வரவுள்ள பிபா உலகக் கிண்ண வெற்றிக் கிண்ணம்

ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் FIFA உலகக் கிண்ண கால்பந்து…

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் 17 வயதுக்கு உட்பட்ட கால்பந்து தொடரில் இரண்டாம் இடம் பெற்ற இக்கல்லூரியின் இளம் அணியினர், அதற்கு அடுத்த ஆண்டு (2016) குறித்த போட்டியின் அதே பிரிவில் மூன்றாம் இடத்தைப் பெற்றனர்.

பின்னர் கடந்த வருடம் இடம்பெற்ற, பாடசாலைகளுக்கு இடையிலான மிகப் பெரிய கால்பந்து தொடரான ”கொத்மலே” கிண்ணப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் பலம் கொண்ட கொழும்பு ஸாஹிரா அணியிடம் வீழ்ந்த பத்திரிசியார் அணியினர் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டனர்.

இவ்வாறான அடைவுகளின் பின்னர் பெறப்பட்ட மிகப் பெரிய வெற்றியாக, இக்கல்லுரி அணி பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்துப் போட்டித் தொடரில் பிரிவு ஒன்றுக்கு (டிவிஷன் 1) தரமுயர்த்தப்பட்டதைக் குறிப்பிடலாம்.

இறுதி நிமிட கோலினால் ஸாஹிராவை வீழ்த்திய புனித பத்திரிசியார் கல்லூரி

ஸாஹிராவிற்கு கிடைத்த ப்ரீ கிக்கினை மொஹமட் ரஷீட் நேரடியாக…

இறுதியாக இடம்பெற்ற இலங்கை பாடசாலை சம்மேளனத்தினால் நடாத்தப்படும் பிரிவு இரண்டிற்கான கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிவரை முன்னேறியிருந்த இக்கல்லூரி வீரர்கள், அதன் இறுதிப் போட்டியில் திருகோணமலை கிண்ணியா மத்திய கல்லூரி அணியிடம் தோல்வியுற்றது. எனினும், இறுதிப் போட்டி வரை முன்னேறிய காரணத்தினால் இம்முறை பிரிவு ஒன்றுக்கு தரமுயர்த்தப்பட்டு, இலங்கையின் பலம் கொண்ட பாடசாலை கால்பந்து அணிகளுடன் போட்டியிடும் அணியாக புனித பத்திரிசியார் கல்லூரி முன்னேற்றம் கண்டது.

இம்முறை தொடர்

இத்தொடரின் அறிமுக அணியாக களம் கண்டு குழு B இல் இடம்பெற்ற பத்திரிசியார் வீரர்கள், பல ஆண்டுகளாக சாதித்து வருகின்ற பலம் கொண்ட கால்பந்து அணிகளுக்கு பெரிதும் அதிர்ச்சி கொடுத்தனர்.

குறிப்பாக, தொடரின் முதல் 3 போட்டிகளையும் தமது சொந்த மைதானத்தில் எதிர்கொண்ட இவர்கள் முதல் இரண்டு போட்டிகளையும் இலகுவாக வெற்றி கொண்டதுடன், அடுத்த போட்டியில் கொத்மலே கிண்ண நடப்புச் சம்பியன் கொழும்பு ஸாஹிரா கல்லூரி அணியையும் போராட்டத்தின் பின்னர் வீழ்த்தினர்.

அதே உத்வேகத்துடன் கொழும்பில் இடம்பெற்ற மற்றொரு பலம் கொண்ட அணியான ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரியுடனான போட்டியையும் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டனர்.

எனினும், புனித பேதுரு கல்லூரிக்கு எதிரான போட்டியில் 1-3 என தோல்வியடைந்த யாழ் வீரர்கள் இத்தொடரின் குழு மட்டத்திற்கான தமது இறுதி ஆட்டத்தில் றோயல் கல்லூரியை 4-0 என வெற்றி கொண்டனர்.

இவ்வாறான சிறந்த பதிவுகளைப் பெற்ற புனித பத்திரிசியார் வீரர்கள், குழு B இல் முதலாம் இடத்தைப் பெற்று அரையிறுதிக்குத் தெரிவாகியுள்ளனர்.

புனித பத்திரிசியாரின் குழு மட்ட முடிவுகள்

5-0 திருச்சிலுவைக் கல்லூரி, களுத்தறை

5–0 லும்பினி கல்லூரி, கொழும்பு

2-1 ஸாஹிரா கல்லூரி, கொழும்பு

1-0 ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரி, கொழும்பு

1-3 புனித பேதுரு கல்லூரி, கொழும்பு

4-0 றோயல் கல்லூரி, கொழும்பு  

வரலாற்று சாதனைகளை கடந்து வந்துள்ள பாடும் மீனின் இலட்சியம் என்ன?

வளர்ந்து வரும் இளம் வீரர்களைக் கொண்டுள்ள ஒரு படையாகத் திகழும்…

தற்பொழுது காலிறுதிக்குத் தெரிவாகியுள்ள இக்கல்லூரி அணியினர் பல சவால்களுக்கு மத்தியில் கொழும்பு அணியினரை எதிர்கொண்டாலும், அணியில் உள்ள முக்கிய வீரர்களின் அபாரத்தினால் நிச்சயம் அடுத்துவரும் சுற்றுக்களிலும் எதிரணிகளுக்கு சவால் கொடுப்பார்கள் என நம்பப்படுகின்றது.

அவதானிக்கப்படக்கூடிய வீரர்கள்

ரஜிகுமார் சான்தன்

பாடசாலைக் கால்பந்தில் மாத்திரமன்றி கழக மட்டத்திலும் நீண்ட கால அனுபவம் கொண்ட இவர், தற்போதைய பத்திரிசியார் கல்லூரி அணியின் முன்களத்தில் பிரகாசிக்கும் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்கின்றார். குறிப்பாக அணி இவர் மீது மிகப்பெரிய ஒரு நம்பிக்கையை வைத்துள்ளது.

செரண்டிப்பை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை அதிகரித்த ரட்னம்

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் பிரீமியர் லீக் பிரிவு ஒன்றுக்கான…

தேசிய மட்டத்திலான பாடசாலைகளுக்கு இடையிலான முன்னணித் தொடரான கொத்மலே கிண்ணத்தின் கடந்த பருவகாலப் போட்டிகளில் புனித பத்திரிசியார் கல்லூரி அணியை இறுதிப் போட்டிவரை கொண்டு செல்வதற்கு முக்கிய காரணியாக இருந்த ஒருவர்தான் சான்தன்.

அது போன்றே, யாழ்ப்பாணம் பாடும் மீன் கழக அணிக்காக விளையாடும் இவர், கடந்த பருவகால FA கிண்ணத் தொடரில் அவ்வணியின் முன்களத்தில் பிரகாசித்த முக்கிய வீரராகவும் இருந்தார். குறித்த தொடரில் பாடும் மீன் அணி காலிறுதிக்கு முன்னைய சுற்று வரை முன்னேற்றம் கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

ஹைன்ஸ் ஹமில்டன்

ஹைன்ஸைப் பொறுத்தவரை கடந்த பல வருடங்களாக இவ்வணிக்காக விளையாடிவரும் மற்றொரு வீரராக உள்ளார். இந்த பருவகாலத்திலும் முன்களத்தில் பிரகாசித்து வரும் இவர், சான்தனுடன் இணைந்து செயற்பட்டு அணிக்கு கோல் மழைகளைப் பெற்றுக்கொடுத்த ஒரு முக்கிய புள்ளியாகவும் உள்ளார்.  

பெனால்டி, ப்ரீ கிக் போன்ற வாய்ப்புக்களைப் பெறுவதற்கு அணியில் முன்னிலை பெற்றவராகத் திகழும் ஹைன்ஸ், அவ்வாறான வாய்ப்புக்களின் மூலம் அணிக்கு அதிகளவில் பயன்களையே ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

குறிப்பாக அழுத்தங்களுக்கு மத்தியில், தனது அனுபவத்தைக் கொண்டு அணியை எடுத்துச் செல்வதில் இவருக்கு முக்கிய பங்குண்டு.

வாய்ப்புகளைத் தவறவிட்ட பாடும்மீன்; காலிறுதியில் புளூ ஸ்ரார்

இவ்வருட FA கிண்ண போட்டியில் அபாரங்காட்டிய யாழ்ப்பாணம் பாடும்மீன்…

கிஜூமன் ரஜித்

கடந்த வருடம் இக்கல்லூரி அணியில் இருந்து மிகத் திறமையான கோல் காப்பாளர் பிருன்தாபனின் பணியை இம்முறை சிறந்த முறையில் முன்னெடுத்து வரும் ஒருவராக கிஜூமன் ரஜித்தைக் குறிப்பிடலாம்.

இவ்வருடம் நடைபெற்று முடிந்த அனைத்து போட்டிகளிலும் சிறந்த பெறுபேறுகளை ஏற்படுத்துவதற்கு மிகவும் பங்காற்றிய இவர் எதிர்வரும் போட்டிகளிலும் சிறப்பாக செயற்படுவார் என்று நம்பப்படுகின்றது.

பயிற்றுவிப்பாளர்  

பத்திரிசியார் கல்லூரி கால்பந்துக்கு நீண்ட காலம் பங்களிப்புச் செய்யும் ஒருவராக இக்கல்லூரி அணியின் பயிற்றுவிப்பாளர் டெனிஸ்மேரின் செயற்பட்டு வருகின்றார். சுமார் 10 வருடங்கள் இக்கல்லூரி அணிகளுக்கு வழிகாட்டி வருகின்ற இவர், அன்று முதல் இன்று வரையிலான அணியின் சகலவிதமான நிலைமைகளையும் அறிந்த ஒருவராக இருக்கின்றார்.   

தற்போதைய பிரதான அணி வீரர்கள் சகலருடைய விளையாட்டு முறைமைகளை, முன்பில் இருந்து நன்கு அறிந்து வைத்துள்ள இவர் அணியை தயார்படுத்தும் விடயத்தில் மிகவும் கச்சிதமாக செயற்பட்டு வருகின்றார்.

இறுதியாக,

கடந்த பல வருடங்கலாக மேற்கொள்ளும் தொடர் முயற்சிகள் மற்றும் கடின உழைப்புகளின் பயனாக இம்முறை பிரிவு ஒன்றுக்கு தரமுயர்த்தப்பட்டு, அதில் மிகவும் அபாரம் காண்பித்து வரும் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி வீரர்கள் இம்முறை பிரிவு ஒன்றுக்கான கிண்ணத்தை வெல்லும் ஒரே நோக்குடன் உள்ளனர்.

எனவே, அவர்களது எதிர்பார்ப்புக்கள் நிறைவேற வேண்டும் என்றால் பலம் கொண்ட அணிகள் பங்கு கொள்ளும் காலிறுதி மற்றும் அரையிறுதி சுற்றுப் போட்டிகளில் அவர்கள் கடும் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.