இந்தியாவுடனான டெஸ்ட் தொடரிலிருந்து விலகும் ஜெக் லீச்

England Tour India 2024

39
Jack Leach ruled out of rest of Test series

இந்தியாவுக்கு எதிரான எஞ்சியுள்ள 3 டெஸ்ட் போட்டிகளிலிருந்து இங்கிலாந்து அணியின் முன்னணி சுழல்பந்து வீச்சாளர் ஜெக் லீச் விலகியுள்ளார். 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடர் 1-1 என சமனில் உள்ளது. 

இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 15ஆம் திகதி ராஜ்கோட்டில் ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் இருந்து இங்கிலாந்து அணியின் முன்னணி சுழல்பந்து வீச்சாளரான ஜெக் லீக் விலகுவதாக  இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. 

இந்தியாவுக்கு எதிராக ஹைதராபத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் போது இடது கால் முட்டியில் ஜெக் லீச் காயமடைந்தார். அதன் பின்னர் இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

இதுதொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது 

அடுத்த 24 மணி நேரத்தில் அபு தாபியில் இருந்து இங்கிலாந்து செல்லும் விமானத்தில் ஜெக் லீச் நாடு திரும்புவார். மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி ராஜ்கோட்டில் உள்ளது. இங்கிலாந்து மருத்துவக் குழு ஜெக் லீச்சின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது 

இதனிடையே, ஜாக் லீச்சுக்குப் பதிலாக மாற்று வீரர் யாரும் அறிவிக்கப்படவில்லை. இங்கிலாந்து அணி டொம் ஹார்ட்லி, ரெஹான் அஹ்மட் மற்றும் சொஹைப் பஷீர் ஆகிய மூன்று பிரதான சுழல்;பந்து வீச்சாளர்களுடனும், ஜோ ரூட் ஆகிய பகுதிநேர சுழல் பந்துவீச்சாளருடனும் எஞ்சியுள்ள போட்டிகளில் களமிறங்கவுள்ளது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<