T20 போட்டிகளில் சிறந்த பந்துவீச்சினை பதிவு செய்த இசுரு உதான

423

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான இசுரு உதான, T20 போட்டிகளில் தனது சிறந்த பந்துவீச்சுப்பிரதியினை பதிவு செய்திருக்கின்றார். 

தென்னாபிரிக்கா அணி இலங்கையை வந்தடைந்தது

கரீபியன் பிரிமீயர் லீக் (CPL) T20 தொடரின் 09ஆவது பருவகாலத்திற்கான போட்டிகள் தற்போது மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றுவருகின்றது. அதன்படி, நேற்று (27) இந்த தொடரின்  குழுநிலைப் போட்டி ஒன்றில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் பார்படோஸ் ரோயல்ஸ் அணிகள் ஆகியவை மோதின. 

குறித்த போட்டியில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியிருந்த இசுரு உதான, 4 ஓவர்களில் 21 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்களை சாய்த்தே, T20 போட்டிகளில் தன்னுடைய சிறந்த பந்துவீச்சினைப் பிரதியினை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், இசுரு உதானவின் அபார பந்துவீச்சு காரணமாக ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியுடன் குறித்த போட்டியில் ஆடிய பார்படோஸ் கிங்ஸ் அணி 19.2 ஓவர்களில் வெறும் 122 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்திருந்திருந்ததோடு, போட்டியிலும் (6 விக்கெட்டுக்களால் மோசமான முறையில்) தோல்வியினை தழுவியது.

Video – இலங்கை கிரிக்கெட் அணியின் Finisher Dasun Shanaka?? | Cricket Galatta Epi 60

இதேவேளை, குறித்த போட்டியில் ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணியின் வெற்றியினை உறுதி செய்த இசுரு உதான ஆட்டநாயகனாகவும் தெரிவாகியிருந்தார். 

இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற இசுரு உதான, தற்போது உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்தும் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<