க்ளோபல் டி20 கனடா கிரிக்கெட் தொடரின் இரண்டாவது பருவகாலத்திற்கான போட்டித் தொடரில் விளையாடும் வாய்ப்பை இலங்கை அணியின் திசர பெரேரா, நிரோஷன் திக்வெல்ல மற்றும் இசுரு உதான ஆகிய மூன்று வீரர்களும் பெற்றுள்ளனர்.

அடுத்த மாதம் (ஜூலை) 25ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 11ஆம் திகதி வரை கனடாவின் ப்ரம்டொனில் நடைபெறவுள்ள இந்த வருட க்ளோபல் டி20 கனடா தொடரில் இருந்து ஒரு அணி விலக அதற்கு பதிலாக ப்ராம்டொன் வோல்வ்ஸ் புதிய அணியாக இணைந்துள்ளது.

குளோபல் T20 கிண்ணம் கிறிஸ் கெய்லின் வான்கூவர் நைட்ஸ் அணிக்கு

கனடா கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு…

கிரிக்கெட் போட்டிகளை பொருத்தவரையில் டி20 போட்டிகளுக்கு அதிக இரசிகர்கள் கூட்டம் காணப்படுகின்றது. இவ்வாறு அதிக இரசிகர்கள் கூட்டம் காணப்படுவதனால் டி20 போட்டிகளில் அதிக வருவாய் கிடைக்கின்றது. இதன் காரணமாக கிரிக்கெட் விளையாட்டில் தடம்பதித்துள்ள ஒவ்வொரு நாடும் டி20 லீக் தொடர்களை வருடா வருடம் நடாத்தி வருகின்றன.

அந்த அடிப்படையில் கனடா கிரிக்கெட் சபையானது வெளிநாட்டு வீரர்களை உள்வாங்கி கடந்த வருடம் டி20 லீக் தொடர் ஒன்றை அறிமுகம் செய்தது. ஆறு அணிகளின் பங்குபற்றுதலுடன்க்ளோபல் டி20 கனடாஎனும் பெயரில் குறித்த தொடர் நடாத்தப்பட்டது. முதல் தொடரின் சம்பியனான வன்கூவர் நைட்ஸ் அணி தெரிவாகியிருந்தது.

இவ்வாறான டி20 லீக் தொடர்களுக்கு ஒவ்வொரு பருவகாலத்திற்கு ஒவ்வொரு அணியிலும் மாற்றங்கள் இடம்பெற்று புதிய புதிய வீரர்கள் உள்வாங்கப்படுவர். அதாவது ஒப்பந்தம், ஏலத்தின் அடிப்படையில் வீரர்கள் இடம்பெறுவர். அந்த வகையில் இவ்வருடம் (2019) நடைபெறவுள்ள தொடருக்கான வீரர்கள் தேர்வு நேற்று (20) நடைபெற்றிருந்தது.

கோஹ்லியின் சாதனையை சமன் செய்த டேவிட் வோர்னர்

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில்….

இதன்போது, ஆறு அணிகளில் இருந்து கிரிக்கெட் விளையாட்டில் பிரசித்தி பெற்ற பல நாட்டு வீரர்களையும் உள்ளடக்கி மொத்தமாக 103 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இதில் இலங்கையிலிருந்து கடந்த காலங்களில் பிரகாசித்துவரும் மூன்று வீரர்கள் ஒரே அணியில் விளையாடுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.  

ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான நிரோஷன் டிக்வெல்ல, சகலதுறை வீரர்களான திஸர பெரேரா, இசுரு உதான ஆகியோர் மொன்டெரல் டைகர்ஸ் அணிக்காக விளையாடுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், மொன்டெரல் டைகர்ஸ் அணியில் பெயர் குறிப்பிடக்கூடிய வீரர்களாக ஜோர்ஜ் பெய்லி (அவுஸ்திரேலியா), சுனில் நரேன் (மேற்கிந்திய தீவுகள்), கிமோ போல் (மேற்கிந்திய தீவுகள்) ஆகிய வீரர்கள் காணப்படுகின்றனர்.  

புதிய ஒரு தென்னாபிரிக்க அணியை கட்டியெழுப்ப டு ப்ளெசிஸ் வேண்டுகோள்

இம்முறை உலகக் கிண்ணத்தில்…

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமானது, இந்தியன் ப்ரீமியர் லீக் தவிர்ந்த ஏனைய டி20 லீக் தொடர்களில் இந்திய வீரர்கள் விளையாடுவதற்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில் அண்மையில் முழு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் விடைபெற்ற இந்திய அணியின் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரரும், பகுதிநேர சுழற் பந்துவீச்சாளருமான யுவ்ராஜ் சிங் வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் விளையாடுவதற்கு அனுமதி கோரியிருந்தார்.

இந்நிலையில், தற்போது க்ளோபல் டி20 கனடா லீக் தொடரில் யுவராஜ் சிங் டொரொன்டோ நெசனெல்ஸ் அணிக்காக விளையாட தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேலும், டொரொன்டோ நெசனெல்ஸ் அணியில் பெயர் குறிப்பிடக்கூடிய வீரர்களாக ட்ரென்ட் போல்ட் (நியூசிலாந்து), ஹென்ரிச் கிளாஸன் (தென்னாபிரிக்கா), பிரென்டன் மெக்கலம் (நியூசிலாந்து), கிரொன் பொலார்ட் (மேற்கிந்திய தீவுகள்) ஆகிய வீரர்கள் காணப்படுகின்றனர்.  

ப்ராம்டொன் வோல்வ்ஸ் அணியில் பெயர் குறிப்பிடக்கூடிய வீரர்களாக ஷஹீட் அப்ரிடி (பாகிஸ்தான்), அன்ட்ரே பிளெச்சர் (மேற்கிந்திய தீவுகள்), சகீப் அல் ஹசன் (பங்களாதேஷ்), கொலின் முன்ரோ (நியூசிலாந்து), வஹாப் றியாஸ் (பாகிஸ்தான்), டெரன் சமி (மேற்கிந்திய தீவுகள்), லென்டில் சிம்மன்ஸ் (மேற்கிந்திய தீவுகள்) ஆகிய வீரர்கள் காணப்படுகின்றனர்.  

உலகக் கிண்ணத்திலிருந்து நீக்கப்பட்டார் தவான்

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில்…

தொடரில் விளையாடும் மற்றொரு அணியான எட்மொன்டன் றோயல்ஸ் அணியில் பெயர் குறிப்பிடக்கூடிய வீரர்களாக பென் கட்டிங் (அவுஸ்திரேலியா), ஷதாப் கான் (பாகிஸ்தான்), மொஹமட் நவாஸ் (பாகிஸ்தான்), ஜிம்மி நீசம் (நியூசிலாந்து), பாப் டூ ப்ளெஸிஸ் (தென்னாபிரிக்கா), கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) ஆகிய வீரர்கள் காணப்படுகின்றனர்.  

நடப்பு சம்பியனான வன்கூவர் நைட்ஸ் அணியில் கிறிஸ் கெய்ல் (மேற்கிந்திய தீவுகள்), சுஹைப் மலிக் (பாகிஸ்தான்), அன்ட்ரே ரசல் (மேற்கிந்திய தீவுகள்), டிம் சௌத்தி (நியூசிலாந்து), ரைஸ் வென்டர் டைஸர் (தென்னாபிரிக்கா) ஆகிய வீரர்கள் பெயர் குறிப்பிடக்கூடிய வீரர்களாக காணப்படுகின்றனர்.

வின்னிபெக் ஹெளக்ஸ் அணியின் உமர் அக்மல் (பாகிஸ்தான்), டுவைன் பிராவோ (மேற்கிந்திய தீவுகள்), ஜே.பி டுமினி (தென்னாபிரிக்கா), கிறிஸ் லயன் (அவுஸ்திரேலியா), டுவைன் ஸ்மித் (மேற்கிந்திய தீவுகள்) ஆகிய வீரர்கள் பெயர் குறிப்பிடக்கூடிய வீரர்களாக காணப்படுகின்றனர்.

இலங்கையில் பிறந்து கனடா அணிக்காக விளையாடிவரும் 34 வயதுடைய இடதுகை வேகப் பந்துவீச்சாளரான ரொமேஷ் எரங்க வின்னிபெக் ஹெளக்ஸ் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.            

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<