விஜயபாகு மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் சிறந்த வீரராக இஷான் தெரிவு

96

இலங்கையில் இடம்பெறுகின்ற முக்கியமான மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயங்களில் முக்கிய இடத்தை வகிக்கின்ற விஜயபாகு மோட்டர் க்ரொஸ் போட்டித் தொடரின் இவ்வருடத்துக்கான சிறந்த மோட்டார் சைக்கிளோட்டியாக நட்சத்திர வீரர் இஷான் திஸாநாயக்க தெரிவானார்.

சீகிரிய மோட்டார் பந்தயத்தில் சாதிப்பாரா கமால்தீன் ஹம்தான்?

இலங்கை மோட்டார் வாகன சாரதிகள் சங்கமும், இலங்கை..

முன்னதாக 2016 மற்றும் 2017 ஆகிய வருடங்களில் தேசிய மோட்டார் சைக்கிள் சம்பியனாகத் தெரிவாகிய இஷான், உபாதை காரணமாக கடந்த சில காலங்களாக எந்தவொரு போட்டித் தொடரிலும் பங்கேற்வில்லை. எனினும், அண்மையில் நிறைவுக்கு வந்த சீகிரய ரெலி க்ரொஸ் மோட்டார் பந்தயத்தில் அவர் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில், இலங்கை இராணுவத்தின் விஜயபாகு படைப்பிரிவு, இலங்கை மோட்டார் சைக்கிள் சம்மேளனதுடன் இணைந்து 16ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்திருந்த விஜயபாகு மோட்டர் க்ரொஸ் – 2018 போட்டிகள் கடந்த 17ஆம் திகதி குருநாகல் விஜயபாகு படைப் பிரிவு தலைமையகத்தில் உள்ள போயகனே ஓடுபாதையில் நடைபெற்றது.

இம்முறை போட்டித் தொடரில் 100இற்கும் அதிகமான போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்ததுடன், ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த முன்னணி மோட்டார் சைக்கிளோட்ட வீரர்களும் கலந்துகொண்டிருந்தமை இதன் சிறப்பம்சமாகும்.

இதேநேரம், இம்முறை போட்டித் தொடரில் 13 வகையான போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றதுடன், இதில் MX 2500 சீசீ மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயமானது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

Photos : Vijayaba Supercross 2018

Photos of Vijayaba Supercross 2018..

ஏற்கனவே, இந்தப் போட்டித் தொடரின் MX 250 சீசீ மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயத்தில் மூன்று தடவைகள் சம்பியனாகத் தெரிவாகிய ஜப்பான் நாட்டு வீரர் டொமேயோ சுசிகி, இம்முறையும் பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், போட்டிக்கு முன்னைய தினம் நிலவிய சீரற்ற காலநிலையால் போயகனே ஓடுபாதை சேறும் சகதியுமாக மாறியிருந்தது. இதனால் போட்டியாளர்களுக்கு பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது.

இந்நிலையில், குறித்த போட்டியில் இலங்கையின், சிறந்த மோட்டார் சைக்கிளோட்டியாக பல தடவைகள் விருதுகளைப் தட்டிச் சென்ற இஷான் திஸாநாயக்க, ஜப்பான் நாட்டு வீரர் டொமேயோ சுசிகிக்கு பலத்த போட்டியைக் கொடுத்திருந்தார்.

ஆனால், போட்டியின் ஆரம்பத்தில் தனது சமநிலையை இழந்த ஜப்பான் வீரர் ஓடுபாதையில் வழுக்கிக் கொண்டு வெளியேறினார். இதனால் இஷான் முதலிடத்துக்கு முன்னேறினார். எனினும், தனது முயற்சியை கைவிடாத டொமேயோ, இஷானை பின்தொடர்ந்தார். இது இவ்வாறிருக்க ஓடுபாதையின் சுற்றுவளைவின் போது ஏற்பட்ட மோதலால் இஷானின் மோட்டார் சைக்கிளின் பின்புற டயரில் காற்று வெளியேறியது.இதனால் கடைசி 4 சுற்றுக்களையும் அவர் காற்றில்லாத டயரில் கடந்தார். எனினும், முதல் போட்டியில் ஜப்பான் நாட்டு வீரர் டொமேயோ சுசிகி முன்னிலை பெற்று அதிக கௌரவத்தைப் பெற்றுக்கொண்டார்.

Photos: Vijayabahu Motocross 2018

ThePapare.com | Anjana Dissanayake | 17/06/2018..

இதனைத் தொடர்ந்து ஆரம்பமாகிய இரண்டாவது போட்டி மழை காரணமாக தடைப்பட்டது. இதனால் ஓடுபாதை முழுவது மழை நீர் தேங்கியிருந்ததுடன், போட்டியாளர்கள் மிகப் பெரிய அசௌகரியங்களுக்கும் முகங்கொடுத்தனர். எனினும், முதல் போட்டியைப் போல இஷான் திஸாநாயக்க இந்தப் போட்டியிலும் முன்னிலை பெற்றுக்கொள்ள, ஜப்பான் நாட்டு வீரர் அவரைப் பின்தொடர்ந்து மறுபடியும் போட்டியை கொடுத்திருந்தார். ஒரு சந்தர்ப்பத்தில் இஷானை முந்திய அவர், இரண்டாவது போட்டியிலும் வெற்றியைப் பதிவு செய்தார்.

எனவே விட்டுக்கொடுக்காத தனது சிறப்பான ஆட்டத்தால் டொமேயோ சுசிகி ரசிகர்களுக்கு உற்சாகமளித்தார். இறுதியில் MX 250 சீசீ மோட்டார் சைக்கிள் பிரிவில் முதலிடத்தை டொமேயோ சுசிகி பெற்றுக்கொண்டார்.

எனினும், MX 125 சீசீ மோட்டார் சைக்கிள் பிரிவில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட இஷான் திஸாநாயக்க, 54 புள்ளிகளுடன் இவ்வருடத்துக்கான விஜயபாகு மோட்டர் க்ரொஸ் போட்டித் தொடரின் சிறந்த மோட்டார் சைக்கிளோட்டியாக தெரிவாகினார்.

இதேவேளை, அநுராதபுரம்கெக்கிராவையைச் சேர்ந்த 15 வயதுடைய இளம் மோட்டர் சைக்கிளோட்ட வீரரான திலித கல்ஹார வளர்ந்து வரும் வீரருக்கான விருதை தொடர்ச்சியாக 2ஆவது முறையாகப் பெற்றுக்கொள்ள, முதற்தடவையாக வழங்கப்பட்ட சிறந்த உயரத்தைப் (120 மீற்றர் உயரம்) பதிவு செய்கின்ற மோட்டர் சைக்கிளோட்டிக்கான விசேட விருதை இலங்கை இராணுவத்தின் சமிக்ஞை படைப்பிரிவின் புத்திக தசுன் சில்வாவும் பெற்றுக்கொண்டனர்.

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<