IPL தொடருக்கான திகதிகள் அறிவிப்பு

IPL  2026

45

இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 19ஆவது பருவகால போட்டிகள் அடுத்த ஆண்டு மார்ச் 26 முதல் மே 31ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. 

திகதிகள் வெளியிடப்பட்டுள்ள நிலையிலும்முழுமையான போட்டி அட்டவணையை IPL நிர்வாகம் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. 

IPL ஏலத்தில் இடம்பிடித்துள்ள இலங்கையின் 12 வீரர்கள்

இலங்கை மற்றும் இந்தியாவில் பெப்ரவரி – மார்ச் மாதங்களில் ஐசிசி T20 உலகக்கிண்ணம் நடைபெறவுள்ள நிலையில்இந்த தொடர் முடிவடைந்த மூன்று வார காலப்பகுதியில் IPL தொடர் ஆரம்பமாகவுள்ளது. 

இதனிடையே IPL தொடருக்கான ஏலம் இன்றைய தினம் (16) அபு தாபியில் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் மொத்தமாக 369 வீரர்கள் 77 இடங்களுக்காக போட்டியிடுகின்றனர். இதில் 31 வெளிநாட்டு வீரர்களும் உள்ளடங்குகின்றனர். 

இலங்கை கிரிக்கெ் அணியை பொருத்தவரை 12 வீரர்கள் இம்முறை ஏலத்தில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<