இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நிறைவில், போராட்டமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருக்கும் இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால் மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோரின் சிறப்பாட்டங்களுடன் முதல் இன்னிங்சில் இலங்கை அணி வலுப்பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருதரப்பு சுற்றுத் தொடரின் முதற்கட்டமான இந்த டெஸ்ட் போட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகரில் நகரில் ஆரம்பமாகியிருந்தது.

இரு மாற்றங்களுடன் அபுதாபி டெஸ்ட்டில் முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை

இலங்கை மற்றும் பாகிஸ்தான்…

ஐ.சி.சி இன் புதிய கிரிக்கெட் விதிமுறைகள் அறிமுகம் செய்யப்படுகின்ற இந்த டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தார்.

இன்றைய போட்டியில் களமிறங்கிய இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. துடுப்பாட்ட வீரர்களான கெளஷால் சில்வா மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோர் அணியில் உள்வாங்கப்பட்டிருந்தனர். மறுமுனையில், அதிகம் இளம் வீரர்களைக் கொண்ட சர்பராஸ் அஹ்மட் தலைமையிலான பாகிஸ்தான் குழாத்தில் மத்திய வரிசை துடுப்பாட்ட  வீரர் ஹரிஸ் சொஹைல் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தார்.

நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக இலங்கை வீரர்கள் மிகவும் உஷ்ணம் வாய்ந்த அபுதாபி மைதானத்தில் தமது துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்தனர். தொடக்கத்தில் இருந்தே இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் தடுப்பாட்டத்தை வெளிக்காட்டியிருந்தனர்.

இலங்கையின் முதல் விக்கெட்டாக அணி 34 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆரம்ப வீரர் கெளஷால் சில்வா 12 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார். பாகிஸ்தானின் வலது வலதுகை வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலியினால் துல்லியமாக போல்ட் செய்யப்பட்ட சில்வா மோசமான ஆட்டத்தினை காண்பித்திருந்த போதிலும் இன்றைய நாளில் தனது 2,000 ஆவது டெஸ்ட் ஓட்டத்தினை கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சில்வாவை அடுத்து களம் நுழைந்த இலங்கை அணியின் உப தலைவர் லஹிரு திரிமான்ன  ஓட்டம் ஏதுமின்றி பாகிஸ்தானின் சுழல் வீரர் யாசிர் சாஹ்வினால் LBW முறையில் வீழ்த்தப்பட்டார். திரிமான்னவின் விக்கெட் யாசிர் சாஹ்வுக்கு 150 ஆவது டெஸ்ட் விக்கெட் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இதன் மூலம், 2016ஆம் ஆண்டில் 17ஐ அண்மித்த ஓட்ட சராசரியினைக் காட்டிய காரணத்தினால் இலங்கை டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்ட லஹிரு திரிமான்ன இன்றைய போட்டியிலும் தனக்கு கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்த தவறியிருக்கின்றார்.

தொடர்ந்து ஆரம்ப வீரர் திமுத் கருணாரத்னவுடன் குசல் மெண்டிஸ் சிறிது நேரம் தாக்குப்பிடித்தார். மீண்டும் யாசிர் சாஹ்வினால் கைப்பற்றப்பட்ட விக்கெட்டின் மூலம் குசல் மெண்டிசும் வெறும் 10 ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்பினார். மெண்டிசின் விக்கெட்டினை அடுத்து போட்டியின் மதிய போசண இடைவேளை வழங்கப்பட்டது.

தொடர்ந்த ஆட்டத்தில் புதிதாக களம் நுழைந்த அணித் தலைவர் தினேஷ் சந்திமால் மற்றும் கருணாரத்ன ஆகியோர் நான்காம் விக்கெட்டுக்காக அணியினை கட்டியெழுப்பும் விதமான நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தனர். இவ்வாறானதொரு நிலையில் கருணாரத்ன தனது 13 ஆவது டெஸ்ட் அரைச் சதத்தினை பூர்த்தி செய்தார்.  

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் புதிய விதிகள் அறிமுகம்

போட்டியின் தேநீர் இடைவேளைக்கு பின்னரும் நீடித்த சந்திமால் மற்றும் கருணாரத்ன ஆகியோரின் இணைப்பாட்டம் அணியினை ஒரு உறுதியான நிலைக்கு இட்டுச் சென்றது. இவ்வேளையில் துரதிஷ்டவசமாக கருணாரத்ன ரன் அவுட் மூலம் இலங்கை அணியின் நான்காம் விக்கெட்டாக பறிபோயிருந்தார்.

நான்காம் விக்கெட்டுக்காக 100 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர உதவி செய்திருந்த கருணாரத்ன 205 பந்துகளில் 5 பெளண்டரிகளுடன் 93 ஓட்டங்களினைப் பெற்று சதம் கடக்கத் தவறியிருந்தார்.

திமுத் கருணாரத்ன
திமுத் கருணாரத்ன

கருணாரத்னவின் விக்கெட்டினை அடுத்து புதிய வீரராக மைதானம் விரைந்த நிரோஷன் திக்வெல்லவுடன் அணித் தலைவர் சந்திமால் கைகோர்த்து பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.

இவர்களின் இணைப்பாட்டத்துடன் (66*), போட்டியின் முதல் நாள் நிறைவுறும் போது இலங்கை வீரர்கள் 90 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து 227 ஓட்டங்களினைப் பெற்று நல்ல நிலையில் காணப்பட்டிருந்தனர்.

களத்தில் 13ஆவது டெஸ்ட் அரைச் சதத்தைக் கடந்த சந்திமால் 6 பெளண்டரிகள் உள்ளடங்களாக 60 ஓட்டங்களுடனும்,  நிரோஷன் திக்வெல்ல 63 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 42 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் நிற்கின்றனர்.

ஆரம்பத்தில் போட்டியின் ஆதிக்கத்தினை கைப்பற்றியிருந்த பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட சுழல் வீரர் யாசிர் சாஹ் இரண்டு விக்கெட்டுக்களை இன்றைய நாளில் கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம

Day 1 Scorecard

போட்டியின் இரண்டாம் நாள் நாளை தொடரும்