மீண்டும் ஆரம்பமாகும் ஐபிஎல்; புதிய அட்டவணை வெளியீடு

Indian Premier League 2025

7

இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் இம்மாதம் 17ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. 

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியதை தொடர்ந்து கடந்த 8ஆம் திகதி ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அன்றைய தினம் பஞ்சாப்டெல்லி அணிகள் இடையிலான போட்டி தரம்சாலாவில் நடைபெற்று கொண்டிருந்தது. 10.1 ஓவர்களில் இந்தப் போட்டி நிறுத்தப்பட்டு மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடர் ஒருவார காலத்துக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. 

இந்த நிலையில் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் எதிர்வரும் 17ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாக இருப்பதாக பிசிசிஐ நேற்று (12) அறிவித்துள்ளது. மத்திய அரசு மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் ஆலோசித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி மே 17ஆம் திகதி ஆரம்பமாகும் இத்தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் மே 27ஆம் திகதி வரையில், தொடரின் முதல் பிளேஓஃப் மற்றும் எலிமினேட்டர் சுற்றுப் போட்டிகள் 29 மற்றும் 30ஆம் திகதிகளிலும், இரண்டாவது குவாலிஃபையர் சுற்று போட்டி ஜூன் முதலாம் திகதியும், இறுதிப்போட்டியானது ஜூன் மூன்றாம் திகதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இப்போட்டிகள் பெங்களூரு, டெல்லி, லக்னோ, அஹமதாபாத், மும்பை மற்றும் ஜெய்ப்பூரில் ஆகிய 6 இடங்களில் மாத்திரம் நடைபெறவுள்ளது 

மாற்றப்பட்ட புதிய அட்டவணைப்படி இரண்டு நாளில் இரு போட்டிகள் இடம்பெறுகிறது. இதில் சென்னையில் நடைபெறவிருந்த சென்னை சுப்பர் கிங்ஸ்ராஜஸ்தான் றோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளது. 

இதனிடையே, முன்னதாக இத்தொடரின் இறுதிப்போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில் தற்சமயம் பிளேஓஃப் மற்றும் இறுதிப்போட்டிகான மைதாங்கள் மற்றியமைக்க உள்ளதாக கூறப்படுகிறது 

அதேசமயம், பாதியில் நிறுத்தப்பட்டிருந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியானது மே 24ஆம் திகதி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 

18ஆவது ஐபிஎல் தொடரில் இதுவரை 58 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், சென்னை சுப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிகள் பிளேஓஃப் வாய்ப்பில் இருந்து வெளியேறிவுள்ளனர் 

அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் றேராயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நெருங்குவதால் அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா வீரர்கள் மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாடுவார்களா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<