யுவராஜ் சிங்கின் அதிரடி வீண் : போராடி வென்றது டெல்லி

234

பத்தாவது பருவகாலத்திற்கான .பி.எல் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தினை எட்டியுள்ள நிலையில் நேற்றைய தினமும் விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாத வகையில் மற்றுமொரு போட்டி இடம்பெற்றுள்ளது.

டெல்லியின் பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் டெல்லி டேர்டேவில்ஸ் ஆகிய அணிகள் மோதின

6 ஓட்டங்களால் வெற்றியை தவறவிட்ட வட மாகாணம்

இதன் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி டேர்டேவில்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியினை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான டேவிட் வோர்னர் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் அதிரடி காட்டினர்.

ஆரம்பம் முதலே அதிரடியில் அசத்திய வோர்னர் 30 ஓட்டங்களுடனும், தவான் 28 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 24 பந்துகளில் 24 ஓட்டங்கள் சேர்த்தார்.

இதனைத் தொடர்ந்து 4ஆவது வீரராக களம் இறங்கிய யுவராஜ் சிங் எதிரணியின் பந்து வீச்சை விளாசித் தள்ளினார். அவர் 41 பந்துகளில் 70 ஓட்டங்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.  

இவருடன் ஹென்றிக்ஸ் 18 பந்துகளில் 25 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 185 ஓட்டங்களை குவித்தது.  டெல்லி அணி சார்பில் ரபாடா 4 ஓவரில் 59 ஓட்டங்களை வாரி வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து 186 என்ற இலக்கினை நோக்கித் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய டெல்லி அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக சஞ்சு சம்சன் மற்றும் கருண் நாயர் ஆகியோர் களம் இறங்கினர்.

தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இருவரும் ஐதராபாத் அணி வீரர்களின் பந்து வீச்சை சிதறடித்து, அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

தடுமாறும் டெல்லி அணி : வோர்னரின் அதிரடியில் வீழ்ந்த கொல்கத்தா

கிரிக்கெட் இரசிகர்கள் மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்புக்களை..

இதன்படி 24 ஓட்டங்களில் சம்சனும், 29 ஓட்டங்களில் கருண் நாயரும் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய ரிஷி பாந்த், ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இறுதியில் 19.1 ஓவர்களில் டெல்லி அணி 189 ஓட்டங்களை பெற்று 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. துடுப்பாட்டத்தில் டெல்லி அணி சார்பாக அதிக ஓட்ட எண்ணிக்கையாக கொரி அன்டர்சன் 24 பந்துகளில் 41 ஓட்டங்களை விளாசினார்.

போட்டியின் சுருக்கம்

சன்ரைசர்ஸ் ஐதராபாத்: 185/3 – யுவராஜ் சிங் 70(41), வோர்னர் 30(21), மொஹமட் சமி 36/2(4)

டெல்லி டேர்வில்ஸ்: 189/4(19.1) – கொரி அன்டர்சன் 41(24), கருண் நாயர் 39(20), மொஹமட் சிராஜ் 41/2(4)