சிங்கப்பூரின் OCBC அரங்கில் நடைபெற்ற 11 ஆவது ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டியில் சீன தாய்பேக்கு எதிராக இலங்கை அணி தனது முதல் போட்டியில் 137-5 என்ற புள்ளிகள் கணக்கில் இமாலய வெற்றி ஒன்றை பெற்றுள்ளது.
முதல் கால்பகுதியில் சீன தாய்பே அணி 2 புள்ளிகளை பெற்றிருந்தபோது 37 புள்ளிகளை குவித்த இலங்கை அணி, 2 ஆவது கால் பகுதியில் மேலும் 37 புள்ளிகளை பெற்றது. இதன் போது இரண்டாவது கால் பகுதி ஆட்டத்தில் சீன தாய்பே வீராங்கனைகளால் எந்த ஒரு புள்ளியையும் பெற முடியாததால் முத, பாதி நேரத்தில் 74-2 என்ற புள்ளிகளால் இலங்கையால் முன்னிலை பெற முடிந்தது.
52 வருடங்களின் பின் 13 ஆவது இடத்தைப் பிடித்த இலங்கை கரப்பந்தாட்ட அணி
இதனைத் தொடர்ந்து இலங்கை வீராங்கனைகள் புள்ளிகள் பெறுவது குறைந்தபோதும் அது அவர்கள் 3 ஆவது மற்றும் 4 ஆவது கால் பகுதிகளில் 30 புள்ளிகளுக்கு மேல் பெறாமல் இருக்க தவறவில்லை. 3 ஆவது கால் பகுதியில் 32-1 என புள்ளிகளையும் (106-3) மற்றும் நான்காவது கால் பகுதியில் 31-2 எனவும் பெற்று போட்டி முடியில் 137-5 புள்ளிகளை பெற இலங்கை அணியால் முடிந்தது.
இந்தியாவுக்கு எதிராக இலங்கையின் கடைசி குழுநிலை போட்டி இலங்கை நேரப்படி நாளை (செப்டம்பர் 2) மதியம் 12.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க