லிவர்பூலுக்கு சாதனை வெற்றி: மெஸ்ஸி இன்றி பார்சிலோனா வெற்றி

63

இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லிகா மற்றும் இத்தாலியின் சிரி A மற்றும் பிரான்ஸின் லீக் 1 போட்டிகளின் முக்கிய சில ஆட்டங்கள் இலங்கை நேரப்படி இன்று (29) அதிகாலை நடைபெற்றன. அந்த போட்டிகளின் விபரம் வருமாறு.

  • லிவர்பூல் எதிர் செபில்ட் யுனைடட்

பிரமெல் லேனில் நடைபெற்ற போட்டியில் செபில்ட் யுனைடட் அணியை 1-0 என தோற்கடித்த லிவர்பூல் ப்ரீமியர் லீக்கில் தொடர்ச்சியாக தனது 16 ஆவது வெற்றியை பதிவு செய்தது. 

மெஸ்ஸியின் காயத்திற்கு இடையே பார்சிலோனா வெற்றி

ஸ்பெயின் லா லிகா மற்றும் இத்தாலி சிரீ A….

போட்டியின் 70 ஆவது நிமிடத்தில் ஜோர்ஜினியோ விஜ்னால்டும் ஒரே ஒரு கோலை புகுத்தியபோதும் அது எதிரணி கோல்காப்பாளர் டீன் ஹன்டர்சனின் மோசமான தவறினாலேயே இடம்பெற்றது. 

இம்முறை ப்ரீமியர் லீக் பருவத்தில் முதல் ஏழு போட்டிகளிலும் வெற்றியீட்டி இருக்கும் லிவர்பூல் மொத்தம் 21 புள்ளிகளுடன் முதல் இடத்தை ஆக்கிரமித்துள்ளது. 

  • அட்லெடிகோ மெட்ரிட் எதிர் ரியல் மெட்ரிட்

தமது பலம்மிக்க போட்டி அணியான அட்லெடிகோ மெட்ரிட்டுக்கு எதிரான ஆட்டத்தை கோலின்றி சமநிலை செய்த ரியல் மெட்ரிட் இம்முறை லா லிகாவில் தோல்வியுறாத அணியாக தொடர்ந்து நீடிப்பதோடு புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.  

தனது சொந்த மைதானத்தில் நடந்த போட்டியில் அட்லெடிகோ மெட்ரிட் ஆரம்பத்தில் சில வாய்ப்புகளை பெற்றபோதும் அதனை கோலாக மாற்றத் தவறியது. குறிப்பாக டிகோ கொஸ்டா தெளிவான கோல் வாய்ப்புகள் சிலதை நழுவவிட்டார். 

ரியல் மெட்ரிட் அணிக்காக கரேத் பேல் இரண்டாவது பாதியில் கோலுக்காக முயன்றபோதும் அது கோல் கம்பத்திற்கு வெளியால் சென்றது. கடைசி நேரத்தில் கரிம் பென்சமாவின் கோல் முயற்சியை ஜான் ஒப்லக் சிறப்பாக தடுத்தார்.  

  • பார்சிலோனா எதிர் கெடபே

லியொனல் மெஸ்ஸி இல்லாத நிலையில் கெடபே அணிக்கு எதிரான போட்டியில் பார்சிலோனா 2-0 என வெற்றி பெற்று ஸ்பெயின் லீக்கில் 4 ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டது. 

எதிரணி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பார்சிலோனா வீரர் மார்க் அன்ட்ரே டெர் ஸ்டெஜன் பந்தை நெஞ்சால் கட்டுப்படுத்தி லுவிஸ் சுவேரஸிடம் பரிமாற்ற சுவேரஸ் அதனை நிதானமாக வலைக்குள் செலுத்தினார்.  

இந்நிலையில் 49ஆவது நிமிடத்தில் ஜூனியர் பிர்போ நெருக்கமான தூரத்தில் இருந்து பார்சிலோனா சார்பில் இரண்டாவது கோலை புகுத்தினார். 

நட்சத்திர வீரர் மெஸ்ஸி காயத்திற்கு பின்னர் பார்சிலோனா அணிக்கு திரும்பிய நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வில்லாரியல் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் உபாதைக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.   

  • ஜுவான்டஸ் எதிர் SPAL

காயத்தில் இருந்து மீண்டு வந்த ரொனால்டோ கடைசி நேரத்தில் பெற்ற கோலின் உதவியோடு SPAL அணிக்கு எதிரான போட்டியில் ஜுவான்டஸ் 2-0 என வெற்றியீட்டியது. 

இத்தாலி சீரி A தொடரில் நடப்புச் சம்பியனான ஜுவான்டஸ் இம்முறை தொடரில் தோல்வியுறாத அணியாக நீடிப்பதோடு புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 

இந்தியாவிடம் தோற்ற இலங்கை அரையிறுதி வாய்ப்பை இழந்தது

நேபாளத்தில் இடம்பெறும் 18 வயதுக்கு…

தோள்பட்டையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பிரசியா அணிக்கு எதிராக வெற்றி பெற்ற போட்டியில் இடம்பெறாத ரொனால்டோ, இந்தப் போட்டியில் 78 ஆவது நிமிடத்தில் தலையால் முட்டி கோல் ஒன்றை பெற்றதன் மூலம் ஜுவன்டஸின் வெற்றியை உறுதி செய்தார். 

எனினும் 45ஆவது நிமிடத்தில் மிரலம் பிஜனிக் பெற்ற அபார கோல் ஒன்றின் மூலம் ஜுவான்டஸ் போட்டியில் முன்னிலை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

  • PSG எதிர் கிரொன்டின்ஸ் டி போர்டிக்ஸ்

நெய்மர் பெற்ற ஒரே கோல் மூலம் போர்டிக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி வெற்றியீட்டிக்கொண்டது.  

போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் பெறாத நிலையில் 70 ஆவது நிமிடத்தில் வைத்து நெய்மர் இலகு கோல் ஒன்றை புகுத்தினார். PSG அணியின் இளம் வீரர் கைலியன் ம்பாப்பே காயத்தில் இருந்து மீண்டும் அணிக்கு திரும்பினார். 

  • செல்சி எதிர் பிரைட்டன்

ஸ்டான்ட்போர்ட் பிரட்ஜில் நடைபெற்ற போட்டியில் பிரைட்டனை 2-0 என வீழ்த்திய செல்சி இம்முறை ப்ரீமியர் லீக்கில் தனது சொந்த மைதானத்தில் முதல் வெற்றியை பதிவு செய்து.  

பிஃபா சிறந்த வீரர் விருதை வென்றார் மெஸ்ஸி

பிஃபாவின் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர்….

போட்டியின் இரண்டாவது பாதியில் ஜோர்கின்ஹோ மற்றும் வில்லியன் செல்சி அணி சார்பில் கோல்கள் புகுத்தியதன் மூலம் அந்த அணி அடுத்தடுத்து இரண்டாவது வெற்றியை பெற்றுக் கொண்டது. 

இதற்கு முன்னர் கடந்த புதன்கிழமை நடைபெற்ற கரபோ கிண்ணத்திற்காக கிரீம்சன் டவுன் அணிக்கு எதிரான போட்டியில் செல்சி 7-1 என கோல் மழை பொழிந்தது. 

இந்த வெற்றியுடன் செல்சி ப்ரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் 6 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.  

  • டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் எதிர் சௌதம்டன்

முதல் பாதி ஆட்டத்திலேயே 10 வீரர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட டொட்டன்ஹாம் அணி சௌதம்டனுடனான போட்டியை 2-1 என வெற்றியீட்டியது. 

போட்டியின் ஆரம்பத்திலேயே டன்குய் டொம்பெவே பெற்ற கோல் மூலம் ஹொட்ஸ்பர் முன்னிலை பெற்றபோதும் செர்ஜ் அரிரோ 31 ஆவது நிடத்தில் சிவப்பு அட்டை பெற்றது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. 

இதனைத் தொடர்ந்து சௌதம்டன், ஹுகோ லொரிஸ் செய்த பெரும் தவறை அடுத்து டன்னி இங்ஸ் மூலம் பதில் கோல் திருப்பியது.  

எனினும் முதல் பாதியிலேயே சொன் ஹியுன் மின் மற்றும் கிறிஸ்டியன் எரிக்சன் சிறப்பாக பந்தை கடத்தி வர ஹர்ரி கேன் அதனை கோலாக மாற்றினார். அது டொட்டன்ஹாமின் வெற்றி கோலாகவும் இருந்தது.       

  • மன்செஸ்டர் சிட்டி எதிர் எவர்டன்

எவர்டன் அணிக்கு எதிரான போட்டியில் 3-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நடப்புச் சம்பியன் மன்செஸ்டர் சிட்டி ப்ரீமியர் லீக் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூல் அணியை விடவும் 5 புள்ளிகள் குறைவாக இரண்டாவது இடத்தில் உள்ளது. 

போட்டியின் கடைசி 20 நிமிடங்களுக்குள் ரியாத் மஹ்ரஸ் மற்றும் ரஹீம் ஸ்டர்லிங் பெற்ற கோல்கள் சிட்டி அணியின் வெற்றியை உறுதி செய்தது. 

முன்னதாக போட்டியின் 24 ஆவது நிமிடத்தில் கப்ரியல் ஜேசுஸ் பெற்ற கோலுக்கு 33 ஆவது நிமிடத்தில் எவர்டன் அணியின் கல்வேர்ட் லெவின் பதில் கோல் திருப்பிய நிலையில் இழுபறி நீடித்தது.  

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<