இராணுவ புலனாய்வுப் பிரிவு (MIC) அணியை வீழ்த்திய கெமுனு கண்காணிப்பு படையணியும் (GW), இலங்கை இராணுவ கவசப் படைப்பிரிவு (SLAC) அணியை வீழ்த்திய இலங்கை இராணுவ சேவை படைப்பிரிவு (SLASC) அணியும் இலங்கை இராணுவப் படையணிகளுக்கு இடையிலான இவ்வருடத்திற்கான கால்பந்து சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன.

SLASC எதிர் தி SLAC (முதலாவது அரையிறுதி)

களனிய கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை இராணுவ சேவை படைப்பிரிவு (SLASC) மற்றும் இலங்கை இராணுவ கவசப் படைப்பிரிவு (SLAC) அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 1- 0 என்ற கோல் வித்தியாசத்தில்  இலங்கை இராணுவ சேவை படைப்பிரிவு (SLAC)  வெற்றியைப் பதிவு செய்தது.

காலிறுதியில் வெற்றி பெற்ற SLASC, SLAC, MIC, GW அணிகள்

இலங்கை இராணுவப் படையணிகளுக்கு இடையிலான இவ்வருடத்திற்கான கால்பந்து ச

அரையிறுதிப் போட்டியின் ஆரம்பம் முதலே எதிரணிக்கு மிகப் பெரிய நெருக்கடியை இலங்கை இராணுவ சேவை படைப்பிரிவினர் (SLASC)  கொடுத்திருந்தனர். எனினும், காலிறுதிப் போட்டியைப் போல இப்போட்டியிலும் இலங்கை இராணுவ கவசப் படைப்பிரிவு அணி போட்டியின் இறுதிவரை தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாலும் அவ்வனைத்து முயற்சிகளையும் எதிர்தரப்பு முறியடித்தது.

இந்நிலையில் போட்டியின் 60ஆவது நிமிடத்தில் எதிரணியின் தடுப்பு வீரர்களை பின்தள்ளி இலங்கை இராணுவ சேவை படைப்பிரிவின் விமுக்தி பண்டார அவ்வணிக்காக முதல் கோலைப் பெற்றுக்கொடுத்தார்.

எனினும், இலங்கை இராணுவ கவசப் படைப்பிரிவினர் தமது ஆக்கிரமிப்பு விளையாட்டை மேற்கொண்ட போதிலும், அவ்வணியின் கே.சி மதுஷங்க 2 மஞ்சள் அட்டைகள் காண்பிக்கப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் அவ்வணி போட்டியின் இறுதிவரை எந்தவொரு கோலையும் பெற்றுக்கொள்ள முடியாமல் தோல்வியைத் தழுவியது.

கோல் பெற்றவர்கள்

 இலங்கை இராணுவ சேவை படைப்பிரிவு – விமுக்தி பண்டார 60’


GW எதிர் MIC (இரண்டாவது அரையிறுதி)

இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இராணுவ புலனாய்வுப் பிரிவு (MIC) மற்றும் கெமுனு கண்காணிப்பு படையணியும் (GW) பலப்பரீட்சை நடத்தின. இதில் கடந்த வருடம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கெமுனு கண்காணிப்பு படையணியை வீழ்த்தி இராணுவ புலனாய்வுப் பிரிவு சம்பியன் பட்டத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.

காலிறுதியில் வெற்றி பெற்ற SLASC, SLAC, MIC, GW அணிகள்

இலங்கை இராணுவப் படையணிகளுக்கு இடையிலான இவ்வருடத்திற்கான கால்பந்து

இந்நிலையில், இராணுவ புலனாய்வுப் பிரிவு அணியில் (MIC) இலங்கை இராணுவ கால்பந்து அணி மற்றும் பிரீமியர் லீக் கால்பந்து தொடர்களில் வியைாடியிருந்த அனுபவமிக்க ஒரு சில வீரர்கள் இடம்பெற்றிருந்தமையினால் அவ்வணி பலம் பொருந்திய அணியாக விளையாடியதைக் காணக்கூடியதாக இருந்தது.

எனினும் சிறந்த மூலோபாயத்துடன் விளையாடிய கெமுனு கண்காணிப்பு படையணி, நடப்புச் சம்பியனை 3 – 0 என்ற கோல்கள் கணக்கில் விழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.

அவ்வணி சார்பாக போட்டியின் 30 ஆம் மற்றும் 35ஆம் நிமிடங்களில் ஆர்.கே ராமநாயக்க கோல்களைப் பெற்றுக்கொடுத்து அணியை முன்னிலை பெறச் செய்தார். அதேநேரம், போட்டியின் 2ஆவது பாதியில் இராணுவ புலனாய்வுப் பிரிவின் அனைத்து முயற்சிகளையும் முறியடித்து போட்டியின் 65ஆவது நிமிடத்தில் கெமுனு கண்காணிப்பு படையணி சார்பாக எஸ்.பீ சிறிசோம மற்றுமொரு கோலைப் பெற்றுக்கொடுத்து அவ்வணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

கோல் பெற்றவர்கள்

 கெமுனு கண்காணிப்பு படையணி – ஆர்.கே ராமநாயக்க 30’ & 35’, எஸ்.பீ சிறிசோம 65’

இவ்வருடத்துக்கான இராணுவப் படையணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டித் தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் 9ஆம் திகதி (புதன்கிழமை) மாலை 6.30 மணிக்கு கொழும்பு குதிரைப்பந்தயத்திடல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.