இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் பென் ஸ்டோக்ஸ் தி ஹண்ட்ரட் தொடரில் விளையாடும் போது தசைப்பிடிப்பு உபாதைக்கு முகங்கொடுத்துள்ளார்.
தி ஹண்ட்ரட் தொடரில் நோர்தென் சுபர்சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடிய பென் ஸ்டோக்ஸ், மென்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது உபாதையடைந்தார்.
>> இலங்கை கிரிக்கெட் அணியுடன் இணையும் முன்னாள் இங்கிலாந்து வீரர்
துடுப்பெடுத்தாடும் போது உபாதைக்குள்ளாகிய இவர், அணியின் உதவி ஊழியர்களின் உதவியுடன் மைதானத்திலிருந்து வெளியில் அழைத்துச்செல்லப்பட்டிருந்தார்.
இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் 10 நாட்கள் மாத்திரமே உள்ள நிலையில், பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது இவருடைய உபாதை தொடர்பில் ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், இவர் விளையாடுவார? இல்லையா? என்பது தொடர்பிலான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை அணிக்கு எதிரான ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 21ம் திகதி ஆரம்பாகவுள்ளது. இந்த தொடருக்கான குழாத்திலிருந்து ஷெக் கிரவ்லே ஏற்கனவே விலகியுள்ளதுடன், பென் ஸ்டோக்ஸின் உபாதை தீவிரமடைந்தால் இங்கிலாந்து அணிக்கு இதுவொரு பாரிய இழப்பாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<