இலங்கை – ஆஸி. டெஸ்ட் தொடருக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பம்!

Australia Tour of Sri Lanka 2025

48

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான டிக்கெட் விலைகளை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. 

ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான இந்த முரளி-வார்னே டெஸ்ட் தொடரானது எதிர்வரும் 27ம் திகதி முதல் பெப்ரவரி 10ம் திகதிவரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதனாத்தில் நடைபெறவுள்ளது. 

U19 மகளிர் T20 உலகக்கிண்ணத்தில் இலங்கைக்கு இரண்டாவது வெற்றி!

இந்த தொடருக்கான டிக்கெட்டுகள் 500 ரூபா முதல் 12500 ரூபாவரை விற்பனை செய்யப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இந்த டிக்கெட்டுகளை இலங்கை கிரிக்கெட் சபையின் உத்தியோகபூர்வமாக இணையத்தளமான https://www.srilankacricket.lk/ இல் பெற்றுக்கொள்ள முடியும். 

அதுமாத்திரமின்றி கொழும்பு வித்தியா மாவத்தை மற்றும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேரடியாக சென்றும் ரசிகர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அதேநேரம் ஒருநாள் தொடருக்கான டிக்கெட்டுகளை பெப்ரவரி 7ம் திகதி முதல் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

டிக்கெட் விலைகள்

>>மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க<<