டெஸ்ட் தொடர் இந்தியா வசம்

235
ind v sa

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிராஸ் தீவில் உள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

முதல் இனிங்ஸில் இந்தியா 353 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இனிங்ஸில் 225 ஓட்டங்கள் சேர்த்தது.

128 ஓட்டங்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இனிங்ஸைத் தொடங்கியது. நான்காவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2-வது இனிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ரகானே 51ஓட்டங்களுடனும், ரோகித் சர்மா 41 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கியது. ரோகித் சர்மா மேலும் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். ரகானே அதிரடியாக விளையாடினார். சகா 14 பந்தில் 14 ஓட்டங்களும், ஜடேஜா 13 பந்தில் 16 ஓட்டங்களும் எடுத்தனர்.

இந்திய அணி 217 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது 2-வது இனிங்ஸை டிக்ளேர் செய்தது. முதல் இனிங்ஸுடன் சேர்த்து ஒட்டு மொத்தமாக 345 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இந்தியா 346 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ரகானே 78 ஓட்டங்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் கம்மின்ஸ் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

346 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது. இந்தியாவின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியமால் 108 ஓட்டங்களில் சுருண்டது. இதனால் இந்தியா 237 ஓட்டங்களால் அபரா வெற்றி பெற்றது. அத்துடன் தொடரை 2-0 என கைப்பற்றியது. போட்டியின் ஆட்டநாயகனாக ரவி அஷ்வின் தெரிவு செய்யப்பட்டார்.

போட்டியின் சுருக்கம்

இந்தியா – 353/10

ரவி அஷ்வின் 118, சஹா 104, லோகேஷ் ராஹுல் 50, அஜின்கியா ரஹானே 35 அல்சாரி ஜோசப் 69/3, கமின்ஸ் 54/3, ரோஸ்டன் சேஸ் 70/2

மேற்கிந்திய தீவுகள் – 225/10 கே.சி.பிராத்வெயிட் 64, மார்லன் சாமுவேல்ஸ் 48,  டெரன் பிராவோ 29

புவனேஸ் குமார் 33/5, ரவி அஷ்வின் 52/2

இந்தியா – 217/7d அஜின்கியா ரஹானே 78*, ரோஹித் ஷர்மா 41, லோகேஷ் ராஹுல் 28

கமின்ஸ் 48/6

மேற்கிந்திய தீவுகள் 108/10

டேரன் பிராவோ 59, மார்லன் சாமுவேல்ஸ் 12

முஹமத் ஷமி 15/3, இஷாந்த் ஷர்மா 30/2, ரவீந்திர ஜடேஜா 20/2

இந்திய அணி 237 ஓட்டங்களால் வெற்றி