லெஜண்ட்ஸ் கண்காட்சிப்போட்டியில் விளையாடவுள்ள சனத், முரளி

Legends League Cricket 2022

177

வேர்ல்ட் ஜயண்ட்ஸ் மற்றும் இந்திய மஹாராஜாஸ் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள கண்காட்சிப்போட்டியில் இலங்கை அணியின் முன்னாள் வீரர்கள் சனத் ஜயசூரிய மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோர் விளையாடவுள்ளனர்.

லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்தப்போட்டியாது, இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் 16ம் திகதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சிய T20 லீக்கில் தசுன் ஷானக்க

இந்த போட்டிக்கான வேர்ல்ட் ஜயண்ட்ஸ் மற்றும் இந்திய மஹாராஜாஸ் குழாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி வேர்ல்ட் ஜயண்ட்ஸ் அணியின் தலைவராக இங்கிலாந்தின் இயன் மோர்கன் நியமிக்கப்பட்டுள்ளதுடன், இந்திய கிரிக்கெட் சபையின் தலைவர் சௌரவ் கங்குலி இந்திய மஹாராஜாஸ் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வேர்ல்ட் ஜயண்ட்ஸ் அணியில் இலங்கை அணியின் முத்தையா முரளிதரன் மற்றும் சனத் ஜயசூரிய ஆகியோர் இடம்பிடித்துள்ளதுடன், தென்னாபிரிக்காவின் ஜெகஸ் கலீஸ், ஜொண்டி ரொட்ஸ், டேல் ஸ்டெயன் மற்றும் ஹேர்ஷல் கிப்ஸ் ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரெட் லீ மற்றும் மிச்சல் ஜோன்சன் ஆகிய வீரர்களும் 17 பேர்கொண்ட குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய மஹாராஜாஸ் அணியில் வீரேந்திர செவாக், ஹர்பஜன் சிங், மொஹமட் கைப், இர்பான் பதான் மற்றும் பார்த்திவ் படேல் ஆகியோருடன் IPL சூதாட்ட விவகாரத்தில் 7 வருடகாலம் தடைக்கு முகங்கொடுத்திருந்து, உள்ளூர் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த சாந்தகுமாரன் ஸ்ரீசாந்த் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.

லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரின் முதல் பருவகால போட்டிகள் இவ்வருட ஆரம்பத்தில் நடைபெற்றதுடன் இந்திய மஹாராஜாஸ், ஆசிய லையன்ஸ் மற்றும் வேர்ல்ட் ஜயண்ட்ஸ் அணிகள் மோதியிருந்தன. இதில், வேர்ல்ட் ஜயண்ட்ஸ் அணி சம்பியனாகியிருந்தது. இதேவேளை, அடுத்த பருவகாலத்தில் 4 அணிகள் மோதவுள்ளதுடன் 15 போட்டிகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மஹாராஜாஸ்

சௌரவ் கங்குலி (தலைவர்), வீரேந்திர செவாக், மொஹமட் கைப், யூசுப் பதான், பத்ரிநாத், இர்பான் பதான், பார்த்திவ் படேல், ஸ்ட்ருவட் பின்னி, ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங், நமன் ஓஜா, அஷோக் டிண்டா, பிரக்யன் ஓஜா, அஜய் ஜடேஜா, ஆர்.பி.சிங், ஜொகிந்தர் சர்மா, ரிடீந்தர் சிங் சோதி

வேர்ல்ட் ஜயண்ட்ஸ்

இயன் மோர்கன் (தலைவர்), லெண்ட்ல் சிம்மன்ஸ், ஹேர்ஷல் கிப்ஸ், ஜெகஸ் கல்லீஸ், சனத் ஜயசூரிய, மெட் பிரீயர், நேதன் மெக்கலம், ஜொண்டி ரொட்ஸ், முத்தையா முரளிதரன், டேல் ஸ்டெய்ன், ஹெமில்டன் மஷகட்ஷா, மஷ்ரபி மொர்டஷா, அஸ்கர் ஆப்கான், மிச்சல் ஜோன்ஸன், பிரெட் லீ, கெவின் ஒப்ரைன், டினேஷ் ராம்தீன்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<