நைஜீரியா கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகும் அசங்க குருசிங்ஹ

114

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் முகாமையாளரும், உயர் செயற்திறன் பிரிவின் முன்னாள் தலைவருமான அசங்க குருசிங்ஹ, நைஜீரியா நாட்டு கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

1996இல் உலகக் கிண்ண சம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணியில் இடம்பெற்ற அசங்க குருசிங்ஹ, டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நைஜீரியா கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியை பொறுப்பேற்றுக் கொள்ளவார் என அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதனிடையே, நைஜீரியா நாட்டு கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்சியாளராக செயற்படவுள்ள அவர், அந்நாட்டு கிரிக்கெட் உயர் செயற்றிறன் மேற்பார்வை பிரிவின் தலைவராகவும், உள்ளூர் பயிற்சியாளர்களை பயிற்றுவிக்கும் பிரிவின் தலைவராகவும், பயிற்சி ஆலொசகராகவும் செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்புள்ள வைகிங் அணியில் இணையும் சதீர சமரவிக்ரம

இதுதொடர்பில் அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தலைவர் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில்,

எமது நாட்டு கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்சியாளராக அசங்க குருசிங்ஹவை நியமித்தமை தொடர்பில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறேன். இவரது பயிற்றுவிப்பின் கீழ் எமது கிரிக்கெட் அணி உலக கிரிக்கெட்டில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என நம்புகிறேன். அத்துடன், நைஜீரியா நாட்டில் கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்வது தொடர்பிலும் அவரது பங்களிப்பினைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்

54 வயதான அசங்க குருசிங்ஹ, சுமார் 10 வருடங்களுக்கு மேலாக இலங்கை கிரிக்கெட் அணிக்காக விளையாடியிருந்தார். இதில் 41 டெஸ்ட், 147 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், முறையே 2452 மற்றும் 3902 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

கொழும்பு நாலந்தா கல்லூரியின் பழைய மாணவரும், இடதுகை துடுப்பாட்ட வீரருமான அசங்க குருசிங்ஹ, மூன்றாம் நிலை பயிற்சியாளராக உள்ளார்

அத்துடன், 2017இல் இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக செயற்பட்ட அவர், சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அவுஸ்திரேலியாவில் குடியேறி அங்கு வீரராகவும், பயிற்சியாளராகவும் ஒருசில கழங்களில் செயற்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<