இந்தியா வருகிறது அவுஸ்திரேலியா

503
India V Australia

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

இங்கிலாந்துக்கு எதிரான இலங்கை ஒருநாள் குழாம்

இந்திய அணிக்கான 2016-17 போட்டி அட்டவணையை பி.சி.சி.. இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் அவுஸ்திரேலிய  அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த நான்கு டெஸ்ட் போட்டிகளும் முறையே பெங்களூரு, தரம்சலா, ராஞ்சி மற்றும் புனே ஆகிய நகரங்களில் நடக்க இருக்கிறது.

அத்துடன் மேலும் 6 மைதானங்களில் டெஸ்ட் போட்டிகள் நடத்த அனுமதி அளித்துள்ளது. அதன்படி ராஜ்கோட், விசாகப்பட்டினம், புனே, தரம்சலா, ராஞ்சி மற்றும் இந்தூர் ஆகிய மைதானங்களில் இனிமேல் டெஸ்ட் போட்டிகள் நடைபெறும். தற்போது அவுஸ்திரேலிய தொடருக்காக தரம்சாலா, ராஞ்சி மற்றும் புனே மைதானங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் இந்தியா  நியூசிலாந்துக்கு எதிராக மூன்று டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள், 3 டி20 போடடிகளிலும் விளையாட இருக்கிறது. அதன்பின் பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒரேயொரு டெஸ்டிலும் விளையாட இருக்கிறது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்