கவுண்டி அணியில் இந்திய வீரரிற்குப் பதிலாக பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்

19

இங்கிலாந்தின் உள்ளூர் கவுண்டி அணிகளில் ஒன்றான யோர்க்ஷையர் (Yorkshire) தமது எஞ்சிய பருவத்திற்கான போட்டிகளில் பங்கேற்க வெளிநாட்டு வீரர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானின் முன்வரிசை துடுப்பாட்ட வீரரான இமாம்-உல்-ஹக்கினை இணைத்திருக்கின்றது.  

இந்திய அணியை துரத்தும் காயம்: முக்கிய சகலதுறை வீரர் விலகல் 

இந்திய துடுப்பாட்ட வீரரான ருதுராஜ் கய்க்வாட் யோக்ஷையர் அணியுடன் இந்தப் பருவத்திற்கான கவுண்டி போட்டிகளுக்காக முன்னர் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்த போதும் அவர் சொந்த காரணங்கள் கருதி தொடரிலிருந்து விலகியிருந்தார். இந்த நிலையில் கய்க்வாடின் பிரதியீட்டு வீரராகவே இமாம்-உல்-ஹக் யோக்ஷையர் அணியில் இணைகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது 

பாகிஸ்தான் முன்னாள் துடுப்பாட்ட நட்சத்திரம் இன்சாமம்-உல்-ஹக்கின் மருமகனான இமாம்-உல்-ஹக் சுமார் மூன்று வருட இடைவெளியின் பின்னர் மீண்டும் கவுண்டி தொடரில் ஆடும் வாய்ப்பினை மீண்டும் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும் 

இதற்கு முன்னதாக இமாம்-உல்-ஹக் கடந்த 2022ஆம் ஆண்டு சோமர்ஷெட் அணியினை பிரதிநிதித்துவம் செய்தமை குறிப்பிடத்தக்கது. 

பாகிஸ்தானின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான ஜனாதிபதி கிண்ணத் தொடரில் (President’s Cup) தனது தரப்பினை (Pakistan Television) வெற்றியாளராக மாற்றிய இமாம்-உல்-ஹக், இதுவரை 3 டெஸ்ட் சதங்கள் அடங்கலாக 24 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளதோடு, 9 ஒருநாள் சதங்களுடன் 75 ஒருநாள் போட்டிகளிலும் ஆடியிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<