அடுத்த பருவத்திற்கான (2026) சர்வதேச லீக் T20 (ILT20) தொடரின் திகதிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
>>மேஜர் கழக T20 தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது!<<
ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபை (ECB) ஒழுங்கு செய்யும் ILT20 தொடர் பொதுவாக ஜனவரி – பெப்ரவரி மாதங்களில் இடம்பெறும். எனினும் அடுத்த ஆண்டு ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடர் பெப்ரவரி – மார்ச் இடைவெளியில் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதன் காரணமாக ILT20 தொடரானது புதிய பருவத்திற்காக டிசம்பர்–ஜனவரி இடைவெளியில் ஒழுங்கு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அதன்படி ILT20 தொடரின் நான்காவது பருவத்திற்கான அதாவது 2026ஆம் ஆண்டுக்கான போட்டிகள் டிசம்பர் மாதம் 02ஆம் திகதி தொடக்கம் 2026ஆம் ஆண்டு ஜனவரி 04ஆம் திகதி வரை நடைபெறுமென ILT20 தொடரின் சிரேஷ்ட நிர்வாக அதிகாரி டேவிட் வைட் குறிப்பிட்டுள்ளார்.
மொத்தம் ஆறு அணிகள் பங்கெடுக்கும் ILT20 தொடரில் நடப்புச் சம்பியனாக டுபாய் கெபிடல்ஸ் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<