ஐ.சி.சி. இன் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக சாமரி அதபத்து

53

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐ.சி.சி.) ஜூலை மாதத்திற்கான சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக சாமரி அதபத்து தெரிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>பங்களாதேஷ் டெஸ்ட் அணிக்கு திரும்பும் சகிப், தஸ்கின்

ஏற்கனவே மே மாதத்திற்கான சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாகவும் தெரிவு செய்யப்பட்ட சாமரி அத்தபத்து, இரண்டு மாத இடைவெளியில் மீண்டும் சிறந்த வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜூலை மாதத்திற்கான சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் பரிந்துரையில் இந்திய அணியின் ஸ்மிரிதி மந்தனா, ஷேபாலி வெர்மா ஆகியோரும் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் இவர்களுடன் போட்டியிட்டு அதிக வாக்குகள் அடிப்படையிலேயே சாமரி அத்தபத்து சிறந்த மகளிர் வீராங்கனையாக தெரிவாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சாமரி அத்தபத்து கடந்த மாதம் நடைபெற்று முடிந்த மகளிர் ஆசியக் கிண்ணத் தொடரில் வெளிப்படுத்திய சிறந்த ஆட்டத்திற்காகவே மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியானது சாமரியின் ஆட்டம் காரணமாக கடந்த மாதம் நடைபெற்று முடிந்த ஆசியக் கிண்ணத் தொடரில் 7 தடவைகள் சம்பியன் பட்டம் வென்ற இந்தியாவினை வீழ்த்தி புதிய ஆசியக் கிண்ண சம்பியன்களாக நாமம் சூடியது.

அதேநேரம் தான் விருது பெற்ற விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் சாமரி அத்தபத்து, தனக்கு கிடைத்த இந்த விருது மூலம் தான் பெருமை கொள்வதாக குறிப்பிட்டிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<