ICC T20 உலகக்கிண்ணத் தொடரின் போட்டிகளில் இந்தியாவில் விளையாட முடியாது என எடுத்த தீர்மானத்தை மீளாய்வு செய்யுமாறு சர்வதேச கிரிக்கெட் சபை கோரியுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறித்துள்ளது.
ஐசிசி மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபைகளுக்கு இடையில் நடைபெற்ற வீடியோ அழைப்பு கலந்துரையாடலின் போது, ஐசிசி இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
>>LPL வீரர்கள் வரைவுக்கான திகதிகள் அறிவிப்பு<<
கொல்கத்தா நைட் ரைடர்ஷ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட முஷ்தபிசூர் ரஹ்மான் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டதன் காரணமாக, பங்களாதேஷ் அணி உலகக்கிண்ணத் தொடருக்காக இந்தியா செல்ல முடியாது என அறிவித்திருந்தது.
இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் காரணிகள் காரணமாக IPL தொடரில் பங்களாதேஷ் வீரர்கள் உள்வாங்கப்படக்கூடாது என்ற போராட்டங்கள் இந்தியாவில் இடம்பெற்றிருந்த நிலையில், பங்களாதேஷ் கிரிக்கெட் சபை பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்தியாவுக்கு செல்ல முடியாது என குறிப்பிட்டது.
இந்தநிலையில் ஐசிசியின் கோரிக்கையின் பின்னரும், பங்களாதேஷ் அணியின் போட்டிகளை இந்தியாவிற்கு வெளியில் நடத்துமாறு மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<






















