Home Tamil U19 ப்ளேட் சம்பியனாக முடிசூடிய இங்கிலாந்து!

U19 ப்ளேட் சம்பியனாக முடிசூடிய இங்கிலாந்து!

343

ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் ப்ளேட் சுற்றுக்கான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் படுதோல்வியை சந்தித்த இலங்கை இளையோர் அணி ப்ளேட் சம்பியனாகும் வாய்ப்பை தவறவிட்டது.

பிளேட் சுற்றுக்கான இறுதிப் போட்டியில் இலங்கை இளையோர் அணி

தென்னாபிரிக்காவில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில், 9 ஆம் இடத்தினைப்…

தென்னாபிரிக்கா – பெனோனியில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்பை இங்கிலாந்து இளையோர் அணிக்கு வழங்கியது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை பெற்றுக்கொண்ட இங்கிலாந்து இளையோர் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 279 ஓட்டங்களை குவித்தது.

இங்கிலாந்து இளையோர் அணியின் முதல் 2 விக்கெட்டுகள் 59 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்ட போதும், டேன் மௌஸ்லி மற்றும் ஜெக் ஹெய்னஸ் ஆகியோரின் அபார துடுப்பாட்டத்தின் உதவியுடன் இங்கிலாந்து இளையோர் அணி மிகச்சிறந்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக்கொண்டது.

மிகச்சிறப்பாக துடுப்பெடுத்தாடிய டேன் மௌஸ்லி 111 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க, அவருடன் நேர்த்தியான இணைப்பாட்டத்தை பகிர்ந்த ஜெக் ஹெய்னஸ் 68 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இவர்களை அடுத்து இறுதியாக இங்கிலாந்து இளையோர் அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுசேர்த்த ஜோய் எவிசன் 59 ஓட்டங்களை விளாசினார்.

இலங்கை இளையோர் அணியின் பந்துவீச்சை பொருத்தவரையில், டில்ஷான் மதுசங்க மற்றும் டிலும் சுதீர ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் விதம் கைப்பற்றினர்.

பின்னர் கடினமான ஓட்ட எண்ணிக்கையை நோக்கி களமிறங்கிய இலங்கை இளையோர் அணி, ஆரம்ப பந்து ஓவர்களில் விக்கெட்டுகளை தொடர்ச்சியாக பறிகொடுத்ததன் காரணமாக 31 ஓவர்கள் நிறைவில் 127 ஓட்டங்களை மாத்திரம் பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் ரவிந்து ரசந்த மாத்திரம் அணிக்காக போராடி 66 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, ஏனைய எந்தவொரு துடுப்பாட்ட வீரரும் துடுப்பாட்டத்தில் தங்களது பங்கினை வழங்கவில்லை. இதில், அணித் தலைவர் நிபுன் தனன்ஜய, சொனால் தினூஷ மற்றும் சமிந்து விஜேசிங்க ஆகியோர் ரன்-அவுட் மூலம் விக்கெட்டினை பறிகொடுத்து அணிக்கு ஏமாற்றம் வழங்கினர்.

ரவிந்து, சமாஸ், டில்ஷானின் அதிரடியுடன் இலங்கை இளையோருக்கு வெற்றி

தென்னாபிரிக்காவில் நடைபெற்றுவரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 13 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (27)…

இங்கிலாந்து இளையோர் அணியின் பந்துவீச்சை பொருத்தவரை, லிவிஸ் கோல்ட்வோர்த்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

அதன்படி, இன்றைய போட்டியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து இளையோர் அணி ஐசிசி 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கிண்ணத் தொடரின் ப்ளேட் சுற்றுக்கான சம்பியன் பட்டத்தை வெற்றிக்கொண்டது. இலங்கை இளையோர் அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ப்ளேட் சம்பியனுக்கான வாய்ப்பை இழந்துள்ளது.

Embed Scorecard –

Result
Sri Lanka U19
127/10 (31)
England U19
279/7 (50)
Batsmen R B 4s 6s SR
Dan Mousley st Kamil Mishara b Kavindu Nadeeshan 111 135 9 1 82.22
Sam Young c Kamil Mishara b Dilshan Madusanka 0 2 0 0 0.00
Jordan Cox lbw b Dilum Sudheera 17 24 2 0 70.83
Jack Haynes c Dilum Sudheera b Ashian Daniel 68 78 5 0 87.18
George Hill c Nipun Dananjaya b Kavindu Nadeeshan 0 2 0 0 0.00
Joey Evison b Chamindu Wijesinghe 59 45 4 3 131.11
George Balderson b Dilshan Madusanka 13 13 1 0 100.00
Kasey Aldridge not out 0 1 0 0 0.00
Extras 11 (b 0 , lb 7 , nb 0, w 4, pen 0)
Total 279/7 (50 Overs, RR: 5.58)
Fall of Wickets 1-1 (0.4) Sam Young, 2-59 (10.5) Jordan Cox, 3-201 (37.6) Jack Haynes, 4-202 (38.3) George Hill, 5-222 (43.2) Dan Mousley, 6-267 (48.3) George Balderson, 7-279 (49.6) Joey Evison,
Bowling O M R W Econ
Dilshan Madusanka 9 0 41 2 4.56
Ashian Daniel 10 0 45 1 4.50
Chamindu Wijesinghe 9 0 59 1 6.56
Dilum Sudheera 9 0 39 2 4.33
Kavindu Nadeeshan 10 0 58 1 5.80
Nipun Dananjaya 2 0 15 0 7.50
Navod Paranavithana 1 0 15 0 15.00

Batsmen R B 4s 6s SR
Navod Paranavithana c Hamidullah Qadri b George Balderson 0 3 0 0 0.00
Kamil Mishara lbw b Lewis Goldsworthy 15 17 3 0 88.24
Ravindu De Silva lbw b Lewis Goldsworthy 66 81 9 0 81.48
Nipun Dananjaya run out (Dan Mousley) 4 4 1 0 100.00
Ahan Wicrkamasinghe lbw b Lewis Goldsworthy 9 9 1 0 100.00
Sonal Dinusha run out (Jack Haynes) 2 12 0 0 16.67
Chamindu Wijesinghe run out (Joey Evison) 11 31 0 0 35.48
Dilum Sudheera lbw b Scott Currie 1 6 0 0 16.67
Kavindu Nadeeshan lbw b Lewis Goldsworthy 1 14 0 0 7.14
Ashian Daniel not out 0 6 0 0 0.00
Dilshan Madusanka c Kasey Aldridge b Lewis Goldsworthy 4 3 1 0 133.33
Extras 14 (b 1 , lb 3 , nb 0, w 10, pen 0)
Total 127/10 (31 Overs, RR: 4.1)
Fall of Wickets 1-1 (0.3) Navod Paranavithana, 2-46 (6.5) Kamil Mishara, 3-55 (8.3) Nipun Dananjaya, 4-67 (10.4) Ahan Wicrkamasinghe, 5-77 (14.2) Sonal Dinusha, 6-110 (23.6) Chamindu Wijesinghe, 7-116 (25.6) Dilum Sudheera, 8-122 (28.4) Ravindu De Silva, 9-123 (30.3) Kavindu Nadeeshan, 10-127 (30.6) Dilshan Madusanka,
Bowling O M R W Econ
George Balderson 4 0 22 1 5.50
Scott Currie 6 1 31 1 5.17
Kasey Aldridge 5 0 21 0 4.20
Lewis Goldsworthy 7 0 21 5 3.00
Hamidullah Qadri 5 1 10 0 2.00
George Hill 4 0 18 0 4.50

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<