Home Tamil உலகக் கிண்ண நடப்புச் சம்பியனை வீழ்த்திய இலங்கை

உலகக் கிண்ண நடப்புச் சம்பியனை வீழ்த்திய இலங்கை

ICC ODI World Cup 2023

227

2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை –  இங்கிலாந்து மோதியிருந்த போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி 8 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

>>இலங்கை அணியுடன் இணையும் அஞ்செலோ மெதிவ்ஸ்

மேலும் இந்த வெற்றியுடன் உலகக் கிண்ணத் தொடரின் நடப்புச் சம்பியனான இங்கிலாந்தினை வீழ்த்தி இலங்கை கிரிக்கெட் அணியானது அவர்களுக்கு எதிராக ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர்களில் தொடர்ச்சியாக 5ஆவது வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

முன்னதாக பெங்களூரில் ஆரம்பமான போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோஸ் பட்லர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தெரிவு செய்தார்.

இப்போட்டிக்கான இலங்கை அணி தமது குழாத்திற்குள் பிரதியீட்டு வீரராக இணைந்த அனுபவம் கொண்ட அஞ்செலோ மெதிவ்ஸ் உடன் லஹிரு குமாரவிற்கு வாய்ப்பு வழங்க துஷான் ஹேமன்த மற்றும் சாமிக்க கருணாரட்னவிற்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.

இலங்கை பதினொருவர்

பெதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (தலைவர்), சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, தனன்ஞய டி சில்வா, அஞ்செலோ மெதிவ்ஸ், லஹிரு குமார, மகீஷ் தீக்ஷன, கசுன் ராஜித, டில்சான் மதுசங்க

இங்கிலாந்து பதினொருவர்

டாவிட் மலான், ஜொன்னி பெயர்ஸ்டோவ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், ஜோஸ் பட்லர் (தலைவர்), மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், ஆதில் ரஷீட், டேவிட் வில்லி, மார்க் வூட்

தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைய துடுப்பாட்டத்தினை தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு டாவிட் மலான் மற்றும் ஜொன்னி பெயர்ஸ்டோவ் ஆகியோர் சிறந்த ஆரம்பத்தினை உருவாக்கிய போதும் அஞ்செலோ மெதிவ்ஸ் இங்கிலாந்தின் முதல் விக்கெட் இணைப்பாட்டத்தினை 45 ஓட்டங்களுடன் முடிவுக்கு கொண்டு வந்தார். இங்கிலாந்தின் முதல் விக்கெட்டாக மெதிவ்ஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த டாவிட் மலான் 25 பந்துகளில் 28 ஓட்டங்கள் எடுத்தார்.

இதன் பின்னர் இங்கிலாந்து இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர்களை சமாளிப்பதில் தடுமாற்றத்தினை எதிர் கொண்டதோடு, இணைப்பாட்டங்கள் உருவாக்குவதிலும் சிரமத்தினை சந்தித்தது. இங்கிலாந்து அணிக்காக பென் ஸ்டோக்ஸ் தவிர ஏனைய துடுப்பாட்டவீரர்கள் எவரும் கை கொடுக்காத நிலையில் அவ்வணி 33.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 156 ஓட்டங்கள் மாத்திரம் எடுத்தது.

இங்கிலாந்து துடுப்பாட்டம் சார்பில் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 6 பௌண்டரிகள் அடங்கலாக 43 ஓட்டங்கள் எடுத்தார். இலங்கை அணியின் பந்துவீச்சில் லஹிரு குமார 3 விக்கெட்டுக்களையும் கசுன் ராஜித மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கை அடைய பதிலுக்கு ஆடிய இலங்கை கிரிக்கெட் அணியானது ஆரம்பத்தில் சிறு தடுமாற்றம் ஒன்றை காட்டிய போதும் பெதும் நிஸ்ஸங்க – சதீர சமரவிக்ரம ஜோடியின் அற்புதமான இணைப்பாட்ட உதவியோடு போட்டியின் வெற்றி இலக்கினை 25.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 160 ஓட்டங்களுடன் அடைந்தது.

>>உலகக் கிண்ணத்தில் மெக்ஸ்வெல் புதிய சாதனை

இலங்கை அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்த வீரர்களில் பெதும் நிஸ்ஸங்க ஆட்டமிழக்காமல் 7 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 77 ஓட்டங்கள் எடுத்ததோடு அது அவர் இந்த உலகக் கிண்ணத் தொடரில் தொடர்ச்சியாக பெற்ற நான்காவது தொடர் அரைச்சதமாகவும் அமைந்தது. இலங்கை அணியின் வெற்றியினை உறுதி செய்த ஏனைய வீரர்களில் சதீர சமரவிக்ரம தன்னுடைய 7ஆவது ஒருநாள் அரைச்சதத்துடன் 54 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 65 ஓட்டங்கள் பெற்றார். அத்துடன் இரண்டு வீரர்களும் இலங்கை அணியின் மூன்றாம் விக்கெட் இணைப்பாட்டமாக 137 ஓட்டங்களையும் பகிர்ந்தனர்.

இங்கிலாந்து பந்துவீச்சில் டேவிட் வில்லி 02 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்த போதும் அவரது பந்துவீச்சு வீணாகியிருந்தது. போட்டியின் ஆட்டநாயகனாக லஹிரு குமார தெரிவாகியிருந்தார்.

ஸ்கோர் விபரம்

Result


England
156/10 (33.2)

Sri Lanka
160/2 (23.4)

Batsmen R B 4s 6s SR
Jonny Bairstow c Dhananjaya de Silva b Kasun Rajitha 30 31 3 0 96.77
Dawid Malan c Kusal Mendis b Angelo Mathews 28 25 6 0 112.00
Joe Root run out (Angelo Mathews) 3 10 0 0 30.00
Ben Stokes c Dushan Hemantha b Lahiru Kumara 43 73 6 0 58.90
Jos Buttler c Kusal Mendis b Lahiru Kumara 8 6 1 0 133.33
Liam Livingstone lbw b Lahiru Kumara 1 6 0 0 16.67
Moeen Ali c Kusal Perera b Angelo Mathews 15 15 1 0 100.00
Chris Woakes c Sadeera Samarawickrama b Kasun Rajitha 0 4 0 0 0.00
David Willey not out 14 17 1 1 82.35
Adil Rashid run out (Kusal Mendis) 2 7 0 0 28.57
Mark Wood st Kusal Mendis b Mahesh Theekshana 5 6 1 0 83.33


Extras 7 (b 0 , lb 3 , nb 0, w 4, pen 0)
Total 156/10 (33.2 Overs, RR: 4.68)
Bowling O M R W Econ
Dilshan Madushanka 5 0 37 0 7.40
Kasun Rajitha 7 0 36 2 5.14
Mahesh Theekshana 8.2 1 21 1 2.56
Angelo Mathews 5 1 14 2 2.80
Lahiru Kumara 7 0 35 3 5.00
Dhananjaya de Silva 1 0 10 0 10.00


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka not out 77 83 7 2 92.77
Kusal Perera c Ben Stokes b David Willey 4 5 1 0 80.00
Kusal Mendis c Jos Buttler b David Willey 11 12 2 0 91.67
Sadeera Samarawickrama not out 65 54 7 1 120.37


Extras 3 (b 0 , lb 0 , nb 0, w 3, pen 0)
Total 160/2 (23.4 Overs, RR: 6.76)
Bowling O M R W Econ
Chris Woakes 4 0 18 0 4.50
David Willey 5 0 30 2 6.00
Adil Rashid 4.4 0 39 0 8.86
Mark Wood 4 0 23 0 5.75
Liam Livingstone 3 0 17 0 5.67
Moeen Ali 3 0 21 0 7.00



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<