நெதர்லாந்து கிரிக்கெட் அணியின் உலகக் கிண்ண குழாம் அறிவிப்பு

Cricket World Cup 2023

94
Cricket World Cup 2023

நெதர்லாந்து கிரிக்கெட் சபை (KNCB) அடுத்த மாதம் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் 15 பேர் அடங்கிய தமது வீரர்கள் குழாத்தினை வெளியிட்டுள்ளது.

>>மீண்டும் IPL தொடருக்கு திரும்பும் மிச்சல் ஸ்டார்க்

ஸ்கொட் எட்வாட்ஸ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள நெதர்லாந்தின் உலகக் கிண்ண அணியில் ரொய்லேப் வன் டி மெர்வே, போல் வான் மீக்கிரேன் மற்றும் கொலின் அக்கர்மேன் ஆகிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதோடு தென்னாபிரிக்காவைச் சேர்ந்த அறிமுக வீரர் சைபிரான்ட் எங்கல்பிரச்ட்டிற்கும் சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டிகள் மூலம் இம்முறை உலகக் கிண்ணத் தொடருக்கு தெரிவாகியிருந்த நெதர்லாந்து அணிக்கு துடுப்பாட்டத்தில் பலம் சேர்க்கும் வீரர்களாக விக்ரம் சிங், அணித்தலைவர் ஸ்கொட் எட்வார்ட்ஸ் மற்றும் மெக்ஸ் ஓடோவ்ட் ஆகிய வீரர்கள் காணப்படுகின்றனர்.

இதேநேரம் பந்துவீச்சினைப் பொறுத்தவரை பாஸ் டீ லீடெ அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருக்க சகீப் சுல்பிகார் மற்றும் ஷரீஸ் அஹ்மட் ஆகியோர் அணிக்கு பிரதான சுழல்பந்துவீச்சாளர்களாக காணப்படுகின்றனர்.

நெதர்லாந்து கிரிக்கெட் அணியானது உலகக் கிண்ணத் தொடரில் தமது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியினை ஒக்டோபர் மாதம் 06ஆம் திகதி எதிர்கொள்ளவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>>சமரியின் சகலதுறை ஆட்டத்தால் இலங்கை மகளிருக்கு சரித்திர வெற்றி

நெதர்லாந்து குழாம்

மெக்ஸ் ஓடோவ்ட், ஸ்கொட் எட்வார்ட்ஸ் (தலைவர்), மெக்ஸ் ஓடோவ்ட், விக்ரம் சிங், சைபிரேன்ட் எங்கல்பிரச்ட், வெஸ்லி பர்ரேஸி, கொலின் அக்கர்மன், பாஸ் டீ லீடே, தேஜா நிடாமனுரு, ரியோலொப் வான் டெர் மேர்வே, லோகன் வான் பீக், சகீப் சுல்பிகார், ஷரீஸ் அஹ்மட், ரயான் கிளெய்ன், ஆர்யன் தட், போல் வான் மீகிரேன்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<