புதிய விளையாட்டு அமைச்சரின் அவதானம் கிரிக்கெட்டில்

1200

ஜனாதிபதி மாளிகையில் கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து தொலைத்தொடர்புகள், டிஜிட்டல் உட்கட்டமைப்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டு அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட ஹரீன் பெர்னாண்டோவிடம் இலங்கை விளையாட்டுத் துறையை வழிநடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மருதானை புனித ஜோசப் கல்லூரியின் பழைய மாணவரான அமைச்சர் பெர்னாண்டோ கல்லூரியின் முதல் பதினைந்து வீரர்களில் இடம்பெற்ற ஆர்வமுடைய ரக்பி ரசிகர் ஆவார். கல்லூரியின் விளையாட்டின் தரத்தை உயர்த்துவதில் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார். ஏற்கனவே தொலைத்தொடர்புகள், டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக பதிவி வகித்திருக்கும் அவருக்கு விளையாட்டுத் துறை அமைச்சராக தனது செயல்திறனை வெளிப்படுத்தும் சவால் உள்ளது.

டெஸ்ட் தரவரிசையில் குசல் மெண்டிஸை முந்திய அஞ்செலோ மெதிவ்ஸ்

விளையாட்டு அமைச்சராக புதிதாக நியமிக்கப்பட்ட அவர் Thepapare.com இற்கு கருத்து தெரிவிக்கும்போது, இலங்கை விளையாட்டை புதிய யுகம் ஒன்றுக்கு இட்டுச் செல்ல எதிர்பார்த்திருப்பதாக கூறினார். ”சவால் மிக்க விளையாட்டு அமைச்சில் பெரும் எண்ணிக்கையிலான சம்மேளனங்கள் மற்றும் கூட்டமைப்புகளைக் கையாளுவது தீர்க்கமாக இருந்தபோதும், அந்த வகையான சவாலை எதிர்கொள்ளவே நான் எதிர்பார்த்திருக்கிறேன். ஒரு நாடாக நாம் மிகவும் ஆர்வம் காட்டும் தேசிய கிரிக்கெட் தொடர்பிலேயே நான் உடனடியாக அவதானம் செலுத்தவுள்ளேன். அண்மைக் காலத்தில் நாம் அதிகம் திறமையை வெளிக்காட்டவில்லை. குறிப்பாக உலகக் கிண்ணம் நெருங்கி இருக்கும் நேரத்தில் இந்த விளையாட்டின் தரத்தை உயர்த்துவதற்கு இந்த விளையாட்டில் சிறந்து விளங்கும் சிலரிடம் ஆலோசனைகளை பெற நான் எதிர்பார்த்துள்ளேன்” என்று ஹரீன் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

இலங்கையின் நம்பிக்கை தரும் தடகள விளையாட்டுப் பற்றி கருத்துக் கூறிய அவர், ”அதிக நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒருசில இளம் தடகள வீரர்கள் உள்ளனர். நாம் ஒலிம்பிக் மீது நிச்சயம் அவதானம் செலுத்த வேண்டும். நாம் முறையாக திறமைகளை வளர்த்தெடுத்தால் சில போட்டிகளில் எம்மால் நல்ல முடிவுகளை பெற முடியும். அனைத்து விளையாட்டுகளிலும் இரண்டாவது வரிசையை பார்த்துக் கொள்வது முக்கியமானதாகும். அவர்களை தொழில்முறை/பகுதி தொழில்முறை வீரர்களாக தக்கவைத்து தேசிய தடகள விளையாட்டை அவர்களின் காலடிக்கு எடுத்துச் செல்ல வேண்டும்” என்றும் அவர் கூறினார்.  

ஊழல் அற்ற, நாட்டின் அத்தியாவசிய அம்சமாக விளையாட்டை தக்கவைத்துக் கொள்வது அவசியமாகும். ”இலங்கையின் விளையாட்டை கடின உழைப்பு, பாதுகாப்பு மற்றும் சுத்தமானதாக வைத்திருக்க நான் விரும்புகிறேன்” என்று அமைச்சர் பெர்னாண்டோ கடைசியாக கூறினார்.  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<