‘எனது வாழ்க்கையே முடிந்துவிட்டது என நினைத்தேன்’ – ரிஷப் பண்ட்

England Tour India 2024

72
England Tour India 2024

விபத்து ஏற்பட்ட போது இந்த உலகத்தில் தனது வாழ்க்கையே முடிந்துவிட்டது என நினைத்ததாக கார் விபத்து குறித்த தனது நினைவை இ;ந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் பகிர்ந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரராக விளையாடி வந்தவர் ரிஷப் பண்ட். இவரது அதிரடி ஆட்டத்தால், பல போட்டிகளில் இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித்தந்தவர். கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் திகதி அதிகாலை கார் விபத்தில் சிக்கினார்.

சொந்த ஊரான உத்தராகண்ட்டின் ரூர்கிக்கு தனது சொகுசு காரில் சென்ற ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர், அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக மருத்துவச் சிகிச்சை பெற்று வரும் அவர், தற்போது மீண்டும் கிரிக்கெட் களத்துக்குத் திரும்பியுள்ளார். விரைவில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, ரிஷப் பண்டின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட இந்த விபத்து குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் அவர் மனம் திறந்து பேசியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் பேசிய ரிஷப் பண்ட்,

‘எனக்கு விபத்து ஏற்பட்ட போது இந்த உலகத்தில் எனது வாழ்க்கையே முடிந்துவிட்டது என நினைத்தேன். ஆனால் இந்த பயங்கர விபத்தில் இதைவிட அதிக காயம் ஏற்படாமல் அதிஷ்டவசமாக சுயநினைவுடன் இருக்கக் கூடிய காயங்களுடன் உயிர் தப்பினேன்.

நான் உயிரோடு இருந்ததே அதிர்ஷ்டமாக உணர்ந்தேன். என்னுடைய உடல் தகுதியை மீட்பதற்காக நான் உலகத்தில் இருந்து என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். இதன் மூலம் நான் வேகமாக உடல் தகுதியை பெற்று உடல் தகுதியை பெறுவது என்பது மிகவும் போர் ஆன ஒரு விஷயம். அது நிச்சயம் வெறுப்பை கொடுக்கும். ஏனென்றால் ஒரே விடயத்தை நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.

நான் கிரிக்கெட் விளையாடிய போது கூட எது பற்றியும் எதிர்காலம் குறித்து நான் யோசிக்க மாட்டேன். நான் மருத்துவமனையில் இருந்த போது மருத்துவரிடம் கேட்டேன். நான் எப்போதும் மீண்டும் குணம் அடைவேன். பலரும் பல விடயங்களை கூறுகிறார்களே? நீங்கள் எனக்கு சரியான ஒரு காலத்தை சொல்லுங்கள் என்றேன். அதற்கு மருத்துவர் நீங்கள் குணமடைய 16 முதல் 18 மாதம் ஆகும் என்று சொன்னார்.

உடனே நான் மருத்துவரிடம் நீங்கள் எந்த நேரம் சொல்கிறீர்களோ அதைவிட ஆறு மாதம் விரைவாக நான் குணமடைந்து காட்டுகிறேன் என்று சவால் விட்டேன். தற்போது என்னிடம் நீ மோட்டார் சைக்கிளில் செல்லாதே என்று கூறினார்கள். அப்போது உங்கள் எல்லோரையும் விட அதிக பயமும் ஏமாற்றமும் இருக்கிறது என்று கூறினேன். ஏனென்றால் எனக்கு இப்போதும் டிரைவிங் செல்வது பிடிக்கும். இதில் ஒரு சரிவு ஏற்பட்டு இருப்பதால் நான் இனி மீண்டும் அதை செய்யவே கூடாது என்பது இல்லை.

இந்த விபத்து என் வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது. அதிலிருந்து எப்படி வெளியே வருவது என்றால் நம்பிக்கைதான் ஒரே வழி. உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நிச்சயமாக நீங்கள் எது வேண்டுமானாலும் சாதிக்கலாம் என் பற்களை துலக்குவது மூலம் சந்தோஷம் கிடைக்கும் என்பதை நான் முதன் முறையாக உணர்ந்தேன். விபத்துக்கு பிறகு முதல்முறையாக குளித்து வெளியே வரும்போது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.

இப்படி சின்ன சின்ன விடயத்தை மீண்டும் செய்வதன் மூலம் என்னுடைய இரண்டாவது வாழ்க்கையை நினைத்து நான் மகிழ்ச்சி கொள்கிறேன். ஏனென்றால், இவ்வளவு பெரிய விபத்தில் சிக்கி பலரும் உயிர் பிழைப்பது கிடையாது. இவ்வளவு பெரிய விபத்திலும் பெரிய எலும்பு முறிவு ஏதும் இல்லை என்று மருத்துவர்கள் கூறினார்கள். கடந்த ஐபிஎல் தொடரில் நான் அணியை விட்டு வெளியே இருந்ததால் என்னால் பெரியதாக எதுவும் செய்ய முடியவில்லை என ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.

ரிஷப் பண்ட் விபத்தில் காயமடைந்த பிறகு இதுவரை எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கெபிடல்ஸ் அணிக்குத் திரும்பவுள்ளார் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<