2025ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர், செப்டம்பர் 9 தொடக்கம் 28 நடைபெறும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
>>இங்கிலாந்து தொடருக்கான போட்டி அட்டவணை அறிவிப்பு<<
அந்தவகையில் இந்த ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத் தொடரானது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் என ஆசியக் கிண்ண கிரிக்கெட் சபையின் (ACC) தலைவரான மொஹ்சின் நக்வி தனது உத்தியோபூர்வ சமூக வலைதள கணக்கின் வாயிலாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஆசியக் கிண்ணம் தொடர்பிலான ஏனைய விடயங்கள் காலக்கிரமத்தில் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
ஆசியக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் இந்தியா அதன் அண்டைய நாடுகளான பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் அரசியல் ரீதியாக முரண்பட்டிருக்கும் நிலையில் இந்த ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத் தொடர் நடைபெறுவதில் சந்தேகம் நிலவி வந்திருந்தது.
விடயங்கள் இவ்வாறு காணப்பட்டிருந்த நிலையிலையே ஆசியக் கிண்ணத் தொடர் நடைபெறுவதானது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த ஆசியக் கிண்ணத் தொடரினை நடாத்தும் உரிமத்தினை இந்தியா கொண்டிருப்பதுடன் தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஹொங்கொங், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் என மொத்தம் 8 நாடுகள் பங்கெடுக்கவிருப்பதோடு, 19 போட்டிகளுடன் தொடர் T20 வடிவத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















