கழக மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கங்களுக்கு உதவும் SLC

1

கொவிட்-19 வைரஸ் காரணமாக இலங்கை கிரிக்கெட்டின் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் கிரிக்கெட்டுடன் தொடர்புடைய பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிசெய்யும் பணியினை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) ஆரம்பித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் அங்கத்துவத்தை பெற்றுள்ள கழகங்களுக்கு மைதானத்தை பராமரிப்பதற்கு மாதந்தம் ஒரு இலட்சம் ரூபாவை வழங்க கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.  

Catch me if you can: முத்தையா முரளிதரன்

கிரிகெட்டின் உயரிய அங்கீகாரமான ஐசிசி Hall of Fame இனுள் உள்வாங்கப்பட்ட முதல்..

அதன்படி, இந்த திட்டத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்காக தலா ஒரு இலட்சம் ரூபாவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இந்த நிதியினை மைதான பராமரிப்பு, அரங்கங்களின் பராமரிப்பு மற்றும் அபிவிருத்திக்கு பயன்படுத்த முடியும் என கிரிக்கெட் சபையின் உயர்மட்ட குழு தெரிவித்திருந்தது. 

அதேநேரம், மாவட்டங்களுக்கான கிரிக்கெட் சங்கங்களுக்கு இந்த காலப்பகுதியில் சுமார் ஒன்றரை இலட்சம் ரூபா வழங்கப்படவுள்ளது. இந்த நிதியை  மாவட்ட அணிகளில் விளையாடும் பாதிக்கப்பட்டுள்ள வீரர்கள் மற்றும் முகாமைத்துவ ஊழியர்களுக்கு பகிர்ந்தளிக்க முடியும் என கிரிக்கெட் சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, இந்த நிதியுதவியை, இலங்கை கிரிக்கெட் சபையில் அங்கத்துவம் வகிக்கும் 11 கிரிக்கெட் கழகங்கள் மற்றும் 26 மாவட்ட கிரிக்கெட் சங்கங்கள் பெற்றுக்கொண்டுள்ளன. அத்துடன், நடுவர்கள் சங்கத்துக்கும் இலங்கை கிரிக்கெட் சபை 7 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவினை நிதியாக வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<