மகளிர் U19 உலகக்கிண்ணத்தின் சுபர் 6 சுற்றின் கட்டமைப்பு எப்படி?

ICC U19 Women’s T20 World Cup 2023

604
How the Super Six stage works at the Women's U19 T20 World Cup

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) முதன்முறையாக நடத்தும் 19 வயதின் கீழ் மகளிருக்கான உலகக்கிண்ணத்தொடரின் தொடர் கட்டமைப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஐசிசியின் ஏனைய தொடர்களை விட சற்று வித்தியாசமான முறையில் மகளிருக்கான 19 வயதின் கீழ் உலகக்கிண்ணத்தின் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன.

>> கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஹஷிம் அம்லா

அதன்படி மொத்தமாக 16 அணிகள் A, B, C மற்றும் D என நான்கு குழுக்களாக வகுக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஒவ்வொரு குழுவிலிருந்தும் 3 அணிகள் சுபர் 6 சுற்றுக்காக தெரிவுசெய்யப்பட்டன.

சுபர் 6 சுற்றில் குழு 1 மற்றும் குழு 2 என இரண்டு குழுக்கள் வகுக்கப்பட்டதுடன், இதில் குழு A மற்றும் குழு D யிலிருந்து முன்னேறிய அணிகள் சுபர் 6 சுற்றின் குழு ஒன்றில் இடம்பெறும். அதேநேரம் B மற்றும் C குழுக்களிலிருந்து முன்னேறும் அணிகள் சுபர் 6 சுற்றில் குழு 2 இல் இடம்பெறும்.

இவ்வாறு சுபர் 6 சுற்றுக்கும் முன்னேறும் 12 அணிகளுடைய முதல் சுற்று வெற்றித்தோல்விகள் மற்றும் ஓட்ட விகிதங்கள் சுபர் 6 சுற்றுக்கு செல்லுபடியாகும். அதன்படியே குழு 1 மற்றும் குழு 2 இல் அணிகள் வரிசைப்படுத்தப்படும்.

சுபர் 6 சுற்றில் ஒரு குழுவில் 6 அணிகள் இடம்பெற்றிருந்தாலும், இரண்டு அணிகளுடன் மாத்திரமே ஒரு அணியால் மோதமுடியும். குறித்த போட்டிகள் குழுவின் தரவரிசையின் அடிப்படையில் முடிவுசெய்யப்படும்.

உதாரணமாக இலங்கை அணி A குழுவில் ஒரு வெற்றியுடன் மூன்றாவது இடத்தை பிடித்துக்கொண்டது. இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் குழு D இல் முறையே முதலிரண்டு இடங்களை பிடித்துக்கொண்டன. எனவே இலங்கை அணியானது குழு D யில் முதலிரண்டு இடங்களை பிடித்துக்கொண்ட அணிகளுடன் மோதவேண்டும்.

அதேநேரம் பங்களாதேஷ் அணி A குழுவில் மூன்று வெற்றிகளுடன் முதலிடத்தை பிடித்துக்கொண்டதால், D குழுவில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துக்கொண்ட தென்னாபிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகளை எதிர்கொள்ளவேண்டும்.

இவ்வாறு நடைபெறும் சுபர் 6 சுற்றிலிருந்து குழு 1 மற்றும் குழு 2 இல் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும். சுபர் 6 சுற்றில் அணிகளின் புள்ளிகள் சமநிலையாக இருக்கும் பட்சத்தில் ஒட்டுமொத்த வெற்றிகளின் அடிப்படையில் அரையிறுதிக்கு அணிகள் தகுதிபெறும். வெற்றிகளும் சமனிலையாக இருந்தால் மாத்திரமே ஓட்டவேகத்தின் அடிப்படையில் அரையிறுதிக்கு அணிகள் தேர்வுசெய்யப்படும் என ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<