ஹொங்கொங் சிக்சஸ் காலிறுதியில் இலங்கை

Hong Kong Sixes 2024 

68
Hong Kong Sixes 2024 

2024ஆம் ஆண்டுக்கான ஹொங்கொங் சிக்சஸ் தொடரில் இன்று இரண்டு போட்டிகளில் ஆடிய இலங்கை அணியானது குறித்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருப்பதோடு தொடரின் காலிறுதிக்கும் தெரிவாகியுள்ளது.

>>இலங்கை – அவுஸ்திரேலியா தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது<<

குழு D இல் ஆடிய இலங்கை அணி தமது முதல் போட்டியில் ஓமானை எதிர்கொண்டதோடு, ஓமானுடன் 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது. இப்போட்டியில் ஓமான் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்த 79 ஓட்டங்களை இலங்கை 4.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 82 ஓட்டங்களுடன் அடைந்தது 

தமது மற்றைய போட்டியில் பங்களாதேஷினை இலங்கை வீரர்கள் 18 ஓட்டங்களால் வீழ்த்தினர். இப்போட்டியில் இலங்கை அணியின் வெற்றிக்கு பக்க பலமாக அமைந்த லஹிரு மதுசங்க 17 பந்துகளில் ஆட்டமிழக்காது 48 ஓட்டங்கள் பெற்றிருக்க, லஹிரு சமரக்கோன் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது 

இலங்கை அணியானது நாளை (02) ஹொங்கொங் சிக்ஸ் தொடரின் காலிறுதிப் போட்டியில் நேபாள அணியினை எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது 

ஸ்கோர் விபரம் 

போட்டி – 01

இலங்கை எதிர் ஓமான்

ஓமான் – 78/2 (6) விக்ரம் சுக்லா 49(18), தனன்ஞய லக்ஷான் 1/04 

 

இலங்கை – 82/2 (4.1) சந்துன் வீரக்கொடி 28(7), J. ராமநந்தி 1/10 

 

முடிவு – இலங்கை 4 விக்கெட்டுக்களால் வெற்றி  

_________________________________________________________________________ 

போட்டி – 02 

இலங்கை எதிர் பங்களாதேஷ்

இலங்கை – 107/3 (6) லஹிரு மதுசங்க 48(17)*, J. அலாம் 2/06 

 

பங்களாதேஷ் – 89/3 (6) மொஹமட் சயீபுத்தின் 42(17)*, லஹிரு சமரக்கோன் 2/26 

 

முடிவு – இலங்கை 18 ஓட்டங்களால் வெற்றி