அமெரிக்காவில் வசித்து வரும் இலங்கை மரதன் ஓட்ட வீராங்கனையான ஹிருனி விஜேரத்ன அமெரிக்காவில் நடைபெற்ற இந்தியனபொலிஸ் மரதன் ஓட்டப் போட்டியில் (Indianapolis Monumental Marathon 2018) பங்குகொண்டு இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
தேசிய இளைஞர் மெய்வல்லுனர் இரண்டாம் நாள் முடிவுகள்
30 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் ….
குறித்த போட்டியை நிறைவுசெய்ய 2 மணித்தியாலங்கள் 38.34 செக்கன்களை எடுத்துக்கொண்ட ஹிருனி, மரதன் ஓட்டப் போட்டியில் தனது 2ஆவது அதிசிறந்த காலத்தையும் பதிவுசெய்தார்.
அத்துடன், ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றிருந்த இம்முறை போட்டிகளில் ஆண் வீரர்களையெல்லாம் பின்தள்ளிய ஹிருனி விஜேரத்ன, ஒட்டுமொத்த நிலையில் 39ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

கடந்த மாதம் நடைபெற்ற சிக்காகோ மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்றிருந்த ஹிருனிக்கு போட்டியை நிறைவுசெய்ய முடியாமல் போனது. எனினும், இந்தியனபொலிஸ் மரதன் ஓட்டப் போட்டியில் அவர் தனது வழமையான திறமையினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தேசிய இளைஞர் விளையாட்டு விழா சம்பியனாக கம்பஹா மாவட்டம்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் ….
கடந்த 17 வருடங்களாக அமெரிக்காவில் வசித்து வருகின்ற ஹிருனி விஜேரத்ன 2017 இல் லண்டனில் இடம்பெற்ற உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் முதல் தடவையாக இலங்கையை பிரதிநிதித்துவம் செய்திருந்தார்.
கடந்த ஓக்டோபரில் நீண்ட கால இடைவெளி ஒன்றின் பின்னர் இலங்கை வந்திருந்த ஹிருனி, கொழும்பில் இடம்பெற்றிருந்த எல்.எஸ்.ஆர் அரை மரதன் தொடரில் பங்கேற்று முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் ஹூஸ்டனில் நடைபெற்ற மரதன் ஓட்ட தொடரில் புதிய தேசிய சாதனையை நிலை நாட்டியிருந்த ஹிருனி, அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறும் வாய்ப்பினையும் பெற்றுக் கொண்டார்.
எனினும், பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி முதற்தடவையாக பங்குபற்றிய அவர், கடுமையான வெயிலுக்கு மத்தியில் போட்டியை 2 மணித்தியாலமும் 49.38 செக்கன்களில் நிறைவு செய்து 11ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதுஇவ்வாறிருக்க, கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற அமெரிக்காவின் போர்ட்லேண்ட் சுவட்டு நிகழ்ச்சியில் பெண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்றிருந்த ஹிருனி, போட்டியை 33 நிமிடங்கள் 57.96 செக்கன்களில் ஓடி முடித்து புதிய தேசிய சாதனையொன்றை நிகழ்த்தியிருந்தார்.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<




















