ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்வரும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடைபெறவுள்ள நான்காவது ILT20 தொடரில் இலங்கையைச் சேர்ந்த எட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
நடப்பு சம்பியனான டுபாய் கெபிட்டல்ஸ் அணி இலங்கை அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் தசுன் ஷானகவையும், வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரவையும் தக்க வைத்துள்ளது. இலங்கையின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டிகளின் அணித் தலைவர் சரித் அசலங்க அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்காக தக்க வைக்கப்பட்டுள்ளார், அதேசமயம், மணிக்கட்டு சுழல்பந்து வீச்சாளர் வனிந்து ஹஸரங்க டெசர்ட் வைப்பர்ஸ் அணியில் தொடர்ந்து தக்க வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், MI எமிரேட்ஸ் அணி இலங்கையின் இளம் சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸை தமது அணிக்காக ஒப்பந்தம் செய்ய, சுழல்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன சார்ஜா வொரியர்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகியுள்ளார்.
ILT20 அறிக்கையின்படி, ஆறு அணிகளும் வீரர்கள் ஏலம் மூலம் தங்கள் அணிகளை முடிவு செய்யவுள்ள நிலையில், இதுதொடர்பிலான விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தக்க வைக்கப்பட்டோர்:
சரித் அசலங்க (அபுதாபி நைட் ரைடர்ஸ்)
வனிந்து ஹஸரங்க (டெசர்ட் வைப்பர்ஸ்)
தசுன் ஷானக (டுபாய் கெப்பிட்டல்ஸ்)
துஷ்மந்த சமீர (டுபாய் கெபிட்டல்ஸ்)
குசல் பெரேரா (எம்ஐ எமிரேட்ஸ்)
குசல் மெண்டிஸ் (சார்ஜா வொரியர்ஸ்)
புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர்கள்:
கமிந்து மெண்டிஸ் (எம்ஐ எமிரேட்ஸ்)
மஹீஷ் தீக்ஷன (சார்ஜா வொரியர்ஸ்)
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<