இந்திய T20I அணியின் தலைவராகும் ஹர்திக் பாண்டியா!

India tour of New Zealand 2022

217

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள T20I மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான குழாம்களை இந்திய கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள இந்திய T20I குழாத்தின் தலைவராக சகலதுறை வீரர் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஒருநாள் குழாத்தின் தலைவராக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார்.

>> இலங்கை அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட சாமிக்க கருணாரத்ன!

நியூசிலாந்துக்கு எதிரான T20I மற்றும் ஒருநாள் தொடர்களை பொருத்தவரை, இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோஹ்லி, தினேஷ் கார்திக், மொஹமட் சமி, ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஷர் படேல் மற்றும் கே.எல். ராஹுல் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதுடன், அணித்தலைவர் ரோஹித் சர்மாவுக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

சிகர் தவான் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு குழாம்களின் உப தலைவராக விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் அணிக்குழாத்தை பொருத்தவரை முதன்முறையாக வேகப்பந்துவீச்சாளர் குல்தீப் சென் அழைக்கப்பட்டுள்ளார்.

>> “அடுத்த இரண்டு போட்டிகளிலும் மேலும் பிரகாசிக்க எதிர்பார்க்கிறேன்” – கசுன் ராஜித

இதேவேளை முன்னணி வீரர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில் சுப்மான் கில், சஞ்சு சம்சன், இஷான் கிஷன், வொஷிங்டன் சுந்தர், உம்ரான் மலிக், ஷபாஷ் அஹ்மட் மற்றும் மொஹமட் சிராஜ் ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுலா இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான T20I தொடர் நவம்பர் 17ம் திகதி ஆரம்பிக்கவுள்ளதுடன், ஒருநாள் தொடர் நவம்பர் 25ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா T20I குழாம்

ஹர்திக் பாண்டியா (தலைவர்), ரிஷப் பண்ட், இஷான் கிஷன், சுப்மான் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சம்சன், வொசிங்டன் சுந்தர், யுஷ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், ஹர்ஷல் படேல், மொஹமட் சிராஜ், புவ்னேஷ்வர் குமார், அர்ஷ்டீப் சிங், உம்ரான் மலிக்

இந்தியா ஒருநாள் குழாம்

சிகர் தவான் (தலைவர்), ரிஷப் பண்ட், சுப்மான் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சம்சன், வொஷிங்டன் சுந்தர், சர்துல் தாகூர், ஷபாஷ் அஹ்மட், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், அர்ஷ்டீப் சிங், தீபக் சஹார், குல்தீப் சென், உம்ரான் மலிக்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<