முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து குழாம் அறிவிப்பு

India tour of England 2021

146

இந்திய  அணிக்கு எதிராக நடைபெறவுள்ள முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்குமான 17 பேர்கொண்ட  குழாத்தை இங்கிலாந்து கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

சுற்றுலா இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 4ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இறுதி நேரத்தில் இலங்கை அணியின் திட்டம் என்ன? கூறும் அசலங்க

போட்டித் தொடருக்காக இந்திய அணி ஏற்கனவே, அங்கு சென்று பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதுடன், இங்கிலாந்து அணி தமது அணிக்குழாத்தை அறிவித்துள்ளது. இந்த குழாத்தில் கடந்த 2016ம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இறுதியாக விளையாடியிருந்த ஹஷீம் ஹமீட் மீண்டும் இங்கிலாந்து குழாத்துக்குள் வரவழைக்கப்பட்டுள்ளார்.

இவர், மோசமான துடுப்பாட்ட பிரகாசிப்பின் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும், இந்த பருவகாலத்தில் விளையாடிய 9  கௌண்டி போட்டிகளில் 2 சதம் மற்றும் 4 அரைச்சதங்கள் அடங்கலாக 642 ஓட்டங்களை குவித்துள்ளார். அதேநேரம், நியூசிலாந்து தொடருக்கான குழாத்திலும் மேலதிக வீரராக இணைக்கப்பட்டிருந்தார்.

இவருடன் ஒழுக்காற்று நடவடிக்கையால் அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்த ஒல்லி ரொபின்ஸன் மீண்டும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். அதேநேரம், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் மற்றும் செம் கரன் ஆகியோரும் அணிக்கு திரும்பியுள்ளனர்.

எவ்வாறாயினும், உபாதை காரணமாக ஜொப்ரா ஆர்ச்சர் இந்திய அணிக்கு எதிரான தொடரிலும் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், உபாதைக்கு முகங்கொடுத்துள்ள கிரிஸ் வோக்ஸ் தொடரின் பிற்பகுதியில் அணியுடன் இணைந்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய தொடருக்கான இங்கிலாந்து குழாம் எதிர்வரும் 28ம் திகதி இணையவுள்ளதுடன். குறித்த திகதிக்கு முன்னர் நடைபெறும் தி ஹண்ட்ரட் போட்டிகளில் தெரிவுசெய்யப்பட்ட வீரர்கள் விளையாட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து குழாம்

ஜோ ரூட் (தலைவர்), ஜேம்ஸ் எண்டர்சன், ஜொனி பெயார்ஸ்டோவ், டொம் பெஸ், ஸ்டுவர்ட் புரோட், ரோரி பேர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஷெக் கிரவ்லி, ஹஷீப் ஹமீட், டேன் லோவ்ரன்ஸ், ஜெக் லீச், ஒல்லி போப், ஒல்லி ரொபின்ஸன், டொம் சிப்லி, பென் ஸ்டோக்ஸ், மார்க் வூட்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…